தலைநகர் டெல்லியில் கடந்த 26ம் தேதி நடைபெற்ற டிராக்டர் பேரணிக்குப் பின் நூறுக்கும் அதிகமான விவசாயிகள் மாயமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. மாயமான விவசாயிகளை 6 பேர் கொண்ட குழு அமைத்து தேடி வருகின்றனர்.
விவசாயிகள் போராட்டம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லை பகுதிகளை முற்றுகையிட்டு கடந்த இரு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தோல்வியடையும் பேச்சுவார்த்தைகள்
விவசாயிகள் போராட்டம் தொடர்பாக மத்திய அரசு, விவசாயிகளுடன் நடத்திய 11 சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தன. மேலும், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, குடியரசு தினத்தன்று டெல்லியில் நடைபெற்ற டிராக்டர் பேரணியும் வன்முறையில் முடிந்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மாயமான விவசாயிகள்
இந்த பேரணியை தொடர்ந்து மீண்டும் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். ஆனால் இந்த பேரணி மற்றும் வன்முறை சம்பவத்துக்கு பின் 100-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என விவசாயிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
6 பேர் குழு & உதவி எண் அறிவிப்பு
மேலும், மாயமான விவசாயிகளைத் தேடவும், இது குறித்து ஆய்வு செய்ய 6 பேர் குழு ஒன்றை அமைத்துள்ள விவசாயிகள், மாயமானவர்களின் விவரங்களை இந்த குழுவினர் சேகரித்து, அது குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் தெரிவிப்பார்கள் என சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு தெரிவித்து உள்ளது. இதேபோல், மாயமானவர்கள் பற்றி தகவல் அறிந்தால் தெரிவிப்பதற்கு செல்போன் எண் ஒன்றையும் அவர்கள் வெளியிட்டு உள்ளனர்.
மேலும் படிக்க...
மழை பாதிப்பு : 11 லட்சம் விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு!!
அதிக மகசூல் பெற அற்புதமான வழி- விபரம் உள்ளே!
பயிர்க்கடன் நிறுத்தம் இல்லை - விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!