கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தற்போது குறைந்துள்ள நிலையில், தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தளர்வுகளால் இந்தியாவில் மாஸ்க் பயன்படுத்துவது 74 சதவீதம் குறைந்துள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் நடமாட்டம் அதிகரிப்பு
முகக் கவசங்களின் (Mask) பயன்பாட்டை நமது வாழ்வின் ஒரு அங்கமாக நாம் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். மே மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் இந்தியாவில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது என்பதை கூகுளின் குறியீட்டு தரவுகள் காட்டுகிறது.
மக்களின் இந்த அதிகமான நடமாட்டம் உள்ள பகுதிகளில் வைரஸ் தொற்று பரவுவதை அதிகமாக்க காரணமாக அமையலாம். கொரோனா (Corona) மேலும் பரவுவதை தடுக்க மாஸ்க் அணிவது, சமூக விலகல் மற்றும் கை சுத்தத்தை பராமரிப்பது போன்ற பழக்கவழக்கங்களை பின்பற்றுவதில் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார்.
மேலும் படிக்க
கொரோனா 3வது அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம்: WHO எச்சரிக்கை!
கண்ணாடி இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் வாரண்டி ரத்து: ஐகோர்ட் அதிரடி