மருத்துவத்துறை மற்றும் பல் மருத்துவத்திற்கான படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப படிவம் வரும் ஜூன் 6 ஆம் தேதி முதல் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என இந்தியா மருத்துவத்துறை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில், 2019 -2020 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்த துறையில் சேருவதற்கு அடிப்படை தகுதியான நுழைவு தேர்வு எனும் நீட் தேர்வு கடந்த மாதம் 5 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது.
நீட் தேர்வினை நாடு முழுவதிலுமிருந்து 15 லட்சத்திற்க்கும் அதிகமான மாணவர்கள் இந்த தேர்வினை எழுதினார்கள். தமிழகத்திலிருந்து மட்டும் 1 லட்சத்து 19 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதி உள்ளனர். நீட் தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகும் நிலையில், மருத்துவ கல்லூரி விண்ணப்ப படிவம் ஜூன் 6 ஆம் தேதி முதல் இணையதளத்தில் இருந்து மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என இந்திய மருத்துவ துறை கூறியுள்ளது.
http://www.tn.health.org/, http://www.tnmedicalselection.org/ ஆகிய இணையத்தளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முதல் கட்ட மாணவர்கள் கலந்தாய்வு ஜூன் 26 ஆம் தேதி முதல் ஆரம்பமாகும் என தகவல் வெளியிட்டுள்ளது.