News

Tuesday, 16 August 2022 11:37 AM , by: R. Balakrishnan

Mediclaim policy is back in LIC

எல்.ஐ.சி., நிறுவனம், மீண்டும் 'மெடிக்ளைம்' பிரிவில் நுழைவதற்கு தயாராக இருப்பதாகவும்; கட்டுப்பாட்டு அமைப்பின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும், அதன் தலைவர் எம்.ஆர்.குமார் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், மீண்டும் மெடிக்ளைம் பாலிசிகள் வழங்குவது குறித்து, இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ.ஐ., அண்மையில் தெரிவித்துள்ளது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

மெடிக்ளைம் பாலிசி (Mediclaim Policy)

நாங்கள் ஏற்கனவே மெடிக்ளைம் பிரிவில் செயல்பட்டு வந்துள்ளோம். அது குறித்த அனுபவம் எங்களுக்கு உள்ளது என அவர் கூறியுள்ளார். உடல்நலக் காப்பீட்டில், இழப்பீடுகளை வழங்கும் வகையிலான மெடிக்கிளைம் பாலிசிகள் தான், மிக அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இருப்பினும், கடந்த 2016ல், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களிடம், மெடிக்ளைம் திட்டங்களை சந்தையிலிருந்து திரும்பப் பெறுமாறு, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., கேட்டுக் கொண்டது. அண்மையில், அனைத்து குடிமக்களுக்கும் வரும் 2030ம் ஆண்டுக்குள் மெடிக்ளைம் பாலிசி வழங்கப்பட வேண்டும் என அரசு அறிவுறுத்தியது. இதைத் தொடர்ந்து, ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும் மெடிக்ளைம் பிரிவில் மீண்டும் செயல்படுவதற்கான நேரம் வந்துள்ளதாக, ஐ.ஆர்.டி.ஏ.ஐ. தலைவர் தேபஷிஷ் பாண்டா கூறியுள்ளார்.

இருப்பினும், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், மெடிக்ளைம் பிரிவில் மீண்டும் செயல்படுவது குறித்த இறுதி முடிவுகள் எதுவும் இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது 24.50 லட்சம் ஆயுள் காப்பீட்டு முகவர்கள் உள்ளனர். ஆனால், பொது காப்பீட்டில், 3.60 லட்சம் முகவர்கள் மட்டுமே உள்ளனர்.இந்நிலையில், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும், உடல்நல காப்பீட்டு திட்டங் களை விற்பனை செய்ய அனுமதிக்கும்பட்சத்தில், அரசு அதன் இலக்கை எளிதாக அடைய முடியும் என கருதப்படுகிறது.

மேலும் படிக்க

ஃபிக்சட் டெபாசிட் திட்டம்: எந்த வங்கியில் எவ்வளவு வட்டி?

புதிய திட்டம் அறிமுகம்: எஸ்பிஐ டெபாசிட் வட்டி விகிதம் உயர்வு.!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)