தமிழகத்தில் இலவசமாக விவசாயம் மற்றும் குடிசை வீடுகளுக்கு வழங்கி வரும் மின்சாரத்திற்கும் இனி கட்டாயம் மீட்டர் பொருத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இலவச மின்சாரம் (Free Electricity)
தமிழகத்தில் தற்போது மின்வாரியத்தின் படி 23.36 லட்சம் விவசாய மின் இணைப்புகளும் 9.45 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளது. அரசு இந்த இணைப்புகளுக்கான மின்சாரத்தை முழுவதும் இலவசமாக அளித்து வருகிறது. இதனால், இந்த இணைப்புகளுக்கு மின் மீட்டர் இதுவரை பொறுத்தப்படுவதில்லை. இதற்கான மானியத்தொகையை மின்வாரியத்திற்கு அரசு தோராயமாக மதிப்பிட்டு வழங்குகிறது. ஆனால் மத்திய அரசு புதிதாக வழங்கும் இணைப்புகளுக்கு கட்டாயம் மின் மீட்டர் பொருத்தப்பட வேண்டும் என்றும், முன்னர் இருந்த இணைப்புகளிலும் கட்டாயம் மீட்டர் பொறுத்த வேண்டும் என்று மாநில அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
தற்போது வரை தமிழகத்தில் 2 லட்சம் விவசாய இணைப்புகளுக்கு மின் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தப்படவில்லை. ஆனால் இனி ஒவ்வொரு மாதமும் இலவச மின்சாரத்தை துல்லியமாக கணக்கிட்டு அதற்கான மானியத்தொகையை மட்டுமே வழங்க வேண்டும் என்று மத்திய அரசு மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, மீட்டர் பொருத்துவதற்கு இன்னும் 30 லட்சம் மீட்டர்கள் தமிழகத்திற்கு தேவை. மின் வாரியத்திடம் அதற்கான தொகை இல்லை. எனவே, வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகள் நடந்து வருவதால், அங்கிருக்கும் பழைய மீட்டர்களை விவசாய மாற்றம் குடிசை இணைப்புகளுக்கு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும் படிக்க
ஆன்லைன் ஆர்டரால் பணத்தை இழக்கும் மக்கள்: எச்சரிக்கும் காவல்துறையினர்!
தமிழக ரேஷன் கடைகளில் 2 புதிய வசதிகள்: மே 10 முதல் அமலுக்கு வரும்!