உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் அமைந்துள்ள ஆர்.எல்.பி மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தில் வருகிற மார்ச் மாதம் 05 ஆம் தேதி MFOI VVIF KISAN BHARAT YATRA தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண்துறை சார்ந்து கடந்த 26 ஆண்டுகளாக ஊடகவியல் துறையில் இயங்கி வரும் கிரிஷி ஜாக்ரான் மற்றும் அக்ரிகல்ச்சர் வேல்ர்ட் இணைந்து வேளாண் துறையில் அதிதீவிரமாக செயல்படுவதோடு நல்ல வருமானம் ஈட்டும் முன்னோடி விவசாயிகளை கௌரவிக்கும் நோக்கத்தோடு MFOI (millionaire farmer of India) விருது வழங்கும் நிகழ்வினை கடந்தாண்டு ஏற்பாடு செய்து இருந்தனர்.
MFOI 2023 நிகழ்வு:
விவசாயிகளை கௌரவிக்கும் இந்த பிரம்மாண்ட நிகழ்வின் முதன்மை ஸ்பான்சராக மஹிந்திரா டிராக்டர்ஸ் இணைந்து இருந்தது. இந்நிலையில் விவசாயிகளிடமிருந்து விருதுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அதில் தேர்வான விவசாயிகளுக்கு விருது வழங்கும் நிகழ்வு டெல்லியில் உள்ள பூசா மைதானத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 6,7,8 நடைப்பெற்றது.
இந்த விருது நிகழ்வோடு வேளாண் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தியா முழுவதுமிருந்து விவசாயிகள் விருதுக்கு விண்ணப்பித்த நிலையில் மாவட்டம், மாநிலம், தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்பட்டது.
MFOI VVIF kisan Bharat yatra:
MFOI 2023 விருது நிகழ்வின் ஒரு பகுதியாக, இந்தியா முழுவதும் பயணம் செய்து விவசாயிகளின் புகழை பரப்ப காத்திருக்கும் MFOI VVIF kisan bharat yatra- வாகனத்தையும், மத்திய சாலைகள் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் யாத்ரா:
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் அமைந்துள்ள ஆர்.எல்.பி மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தில் வருகிற மார்ச் மாதம் 05 ஆம் தேதி காலை 10 மணியளவில் MFOI VVIF KISAN BHARAT YATRA-வினை மேற்கு மற்றும் மத்திய இந்தியாவின் பகுதிகளில் பயணிக்கும் வகையில் கல்லூரி துணைவேந்தர் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துக் கொள்ள உள்ளனர். மேலும், இந்நிகழ்வில் மில்லினியர் விவசாயிகள் கௌரவிக்கப்பட உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பான்சராக இருக்க விருப்பமா?
சம்ரித் கிசான் உத்சவ் தொடர் நிகழ்வின் ஸ்பான்ஸராக இருக்க விரும்பும் நிறுவனங்கள் கீழ்க்காணும் லிங்க் மூலம் தங்களது விருப்பத்தினை தெரிவிக்கலாம்.
MFOI 2023 விருது நிகழ்வினைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டிற்கான நிகழ்வுக்கு (MFOI Awards 2024) பரிந்துரை, மற்றும் விண்ணப்பங்கள் விவசாயிகளிடமிருந்து வரவேற்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டுக்கான நிகழ்வில் ஏறத்தாழ 100-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளதாகவும் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. MFOI விருதுகள் 2024- நிகழ்வானது, டிசம்பர் 1 முதல் டிசம்பர் 5, 2024 வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Read more:
Gold rate hike- தொடர் ஏறுமுகத்தில் தங்கம்: இன்றைய விலை எவ்வளவு?
உ.பி.,யில் MFOI Samridh Kisan Utsav- வருகை தரும் ஒன்றிய இணை அமைச்சர்