பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 19 March, 2024 6:02 PM IST
MFOI VVIF KISAN BHARAT YATRA

கிரிஷி ஜாக்ரன் முன்னெடுப்பில் தொடங்கப்பட்ட MFOI VVIF கிசான் பாரத் யாத்ரா ஏறத்தாழ 6000 கி.மீ தூரத்தை கடந்துள்ளது. இந்த பயணத்தின் வாயிலாக சுமார் 1,00,000 க்கும் மேற்பட்ட விவசாயிகளை சந்தித்து மில்லினியர் விவசாயிகள் குறித்து பரப்புரை மேற்கொண்டுள்ளது.

வேளாண்துறை சார்ந்து கடந்த 26 ஆண்டுகளாக ஊடகவியல் துறையில் இயங்கி வரும் கிரிஷி ஜாக்ரான் மற்றும் அக்ரிகல்ச்சர் வேல்ர்ட் இணைந்து வேளாண் துறையில் அதிதீவிரமாக செயல்படுவதோடு நல்ல வருமானம் ஈட்டும் முன்னோடி விவசாயிகளை கௌரவிக்கும் நோக்கத்தோடு MFOI (millionaire farmer of India) விருது வழங்கும் நிகழ்வினை ஏற்பாடு செய்து இருந்தனர்.

MFOI 2023 நிகழ்வு- கௌரவிக்கப்பட்ட விவசாயிகள்:

விவசாயிகளை கௌரவிக்கும் இந்த பிரம்மாண்ட நிகழ்வின் முதன்மை ஸ்பான்சராக மஹிந்திரா டிராக்டர்ஸ் இணைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மொத்தம் 16 பிரிவுகளின் கீழ் விவசாயிகளிடமிருந்து விருதுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அதில் தேர்வான விவசாயிகளுக்கு விருது வழங்கும் நிகழ்வு டெல்லியில் உள்ள பூசா மைதானத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6,7,8 நடைப்பெற்றது. இந்த விருது நிகழ்வோடு வேளாண் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தியா முழுவதுமிருந்து விவசாயிகள் விருதுக்கு விண்ணப்பித்த நிலையில் மாவட்டம், மாநிலம், தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்பட்டது.

MFOI VVIF kisan bharat yatra:

MFOI 2023 விருது நிகழ்வின் ஒரு பகுதியாக, இந்தியா முழுவதும் பயணம் செய்து விவசாயிகளின் புகழை பரப்பும் நோக்கத்தோடு MFOI VVIF kisan bharat yatra- வாகனத்தை, மத்திய சாலைகள் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த நிதின் கட்காரி கொடியசைத்து தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாகனம் தொடர்ச்சியாக இந்தியாவின் பல மாநிலங்களில் தனது பயணத்தை தொடங்கியது. உத்தரப்பிரதேசம், மஹாராஷ்டிரா, குஜராத், டெல்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும், தமிழகத்தில் சில பகுதிகளிலும் இந்த யாத்ரா மேற்கொள்ளப்பட்டது. தற்போது, இந்த பயணத்தின் வாயிலாக 6000 கி.மீ தூரத்தை கடந்து, 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளை நேரிடையாக சந்தித்துள்ளது கிரிஷி ஜாக்ரான்.

MFOI 2024 நிகழ்வு:

2023- நிகழ்வின் வெற்றியினைத் தொடர்ந்து, Millionaire Farmer of India Awards 2024- நிகழ்வுக்கு விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டுக்கான நிகழ்வில் ஏறத்தாழ 100-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளதாகவும் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MFOI விருதுகள் 2024- நிகழ்வானது, டிசம்பர் 1 முதல் டிசம்பர் 5, 2024 வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நிகழ்வினைப் போன்றே இந்தியாவின் அனைத்து மூலைகளிலிருந்தும் விவசாயிகள், விஞ்ஞானிகள், தொழில் முறை வல்லுனர்கள் பலரும் கலந்துக் கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Read more:

அசுபா 117: புதிய கேரட் ரகத்தை அறிமுகம் செய்த Somani Seedz- சிறப்புகள் என்ன?

மண்புழு உர உற்பத்திக்கான படுக்கையினை தயார் செய்வது எப்படி?

English Summary: MFOI VVIF KISAN BHARAT YATRA journey spanning over 6,000 kilometers currently
Published on: 19 March 2024, 06:02 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now