News

Tuesday, 23 July 2019 05:05 PM

பிரதம மந்திரி விவசாய பாசனத்திட்டம் (PMKSY)

ஒரு துளி நீரில் அதிக பயிர் - 

நுண்ணீர் பாசனத் திட்டம்  -

துணைநிலை நீர் மேலாண்மை செயல்பாடுகள்

நுண்ணீர் பாசனம் அமைக்கவிருக்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பாசனத் திட்டத்துடன் இணைந்து, துணை நிலை நீர் மேலாண்மை பணிகள் கோயம்புத்தூர் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் கீழ் செயல்பட்டு வருகிறது.

இத்திட்டம் கோவை மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும் அக்டோபர் 2018ம் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே நுண்ணீர் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு ஒரு துளி நீரில் அதிகப்பயிர் என்ற மத்திய அரசு செயல்படுத்தும் திட்டத்தில் இணைந்து நுண்ணீர் பாசன மானியம் தவிர மின்மோட்டார், பாசன நீரை வயலுக்கு கொண்டு செல்ல குழாய்கள் நிறுவுதல் மற்றும் தரைநிலை நீர் தேக்கத் தொட்டி அமைத்தல் போன்ற இனங்களுக்கு  மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

எண்

செயல்படுத்தப்படும் பணிகள்

தகுதியுடைய  பின்னேற்பு மானியம்

1

டீசல் பம்பு செட் / மின் மோட்டார் பம்பு செட் நிறுவுதல்

டீசல் பம்பு செட் / மின் மோட்டார் பம்பு செட் ஒன்றின் விலையில் 50% தொகை ரூ. 15,000/- ற்கு மிகாமல்

2

பாசனக்குழாய் அமைத்தல்

குழாய்களின் விலையில் 50% தொகை எக்டருக்கு ரூ 10,000/- ற்கு மிகாமல்

3

தரைநிலை நீர் தேக்கத் தொட்டி (கான்ரிட் அல்லது செங்கல் கட்டுமானம்) Masonry   

பாதுகாப்பு வேலியுடன்= நீர்தேக்கத்தி தொட்டி நிறுவுவதற்கு செலவில் 50% தொகை (ஒரு கன மீட்டர் அல்லது 35.30 கன அடிக்கு ரூ.350/-) நிதி உதவி ஒரு பயனாளிக்கு ரூ.40,000/- ற்கு மிகாமல்

எப்படி பெறுவது

விவசாயிகள் வேளாண்மை துணை இயக்குநர், மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை, கோயம்புத்தூர், செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை, கோயம்புத்தூர், வட்டார உதவி வேளாண்மை இயக்குநர்  மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை முன்பதிவு செய்து பணிகளை மேற்கொண்டு அதற்கான பட்டியல் விவரங்களுடன் முழு ஆவணங்களை, பணி முடிவடைந்தமைக்கான புகைப்படங்களுடன்  சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின் செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கான பின்னேற்பு மானியம் தொகை முழுவதும் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு விவசாயிகளின்  வங்கி சேமிப்பு கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

அணுக வேண்டிய முகவரி

வேளாண்மை இணை இயக்குநர் வளாகம், தடாகம் ரோடு, கோயம்புத்தூர்- 641013

மின் அஞ்சல்: dwdacbe@gmail.com

தொலைபேசி எண்: 0422- 2440069

K.Sakthipriya
krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)