பொது மக்களின் அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றான பால் விலை, லிட்டருக்கு 2 ரூபாய் வீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களும், குறிப்பாகக் கைக்குழந்தைகளை வைத்திருப்போரும் அதிர்ச்சிக்கு ஆளாக நேர்ந்துள்ளது.
பால் விநியோக நிறுவனமான மதர் டைரி (Mother Dairy) இந்தப் பால் விலை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஏற்கெனவே அமுல், பராக் உள்ளிட்ட நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தியுள்ள நிலையில், இந்த நிறுவனம் தற்போது விலை உயர்வை அறிவித்துள்ளது.
இந்தப் பால் விலை உயர்வு மார்ச் 6ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதன்படி, பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக மதர் டைரி நிறுவனம் தெரிவித்துள்ளது. டெல்லி - என்சிஆர் பகுதியில் இந்த விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. பால் கொள்முதல் விலை உயர்ந்துள்ளதால் பால் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதாக மதர் டைரி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மதர் டைரி வெளியிட்டுள்ள செய்தியில், “பால் கொள்முதல் விலை உயர்ந்துள்ளதாலும், எரிபொருள் செலவுகள் மற்றும் பேக்கேஜிங் செலவுகள் அதிகரித்துள்ளதாலும், டெல்லி என்சிஆர் பகுதியில் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம்” என்று விளக்கம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன் அமுல், பராக் ஆகிய நிறுவனங்களும் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தி வாடிக்கையாளர்களை அதிர்ச்சி ஆளாக்கனி. இதனைத் தொடர்ந்து, தற்போது மதர் டைரியும் விலை உயர்த்தியுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க...