News

Thursday, 02 March 2023 12:23 PM , by: Yuvanesh Sathappan

Milk producers decided! to Stop milk supply to Aavin Milk Cooperative

மதுரை: ஆவின் பால் கூட்டுறவு சங்கம் கொள்முதல் விலையை 35ல் இருந்து 42 ஆக உயர்த்தாமல் விட்டாலோ, 7 ஆக ஊக்கத்தொகையாக வழங்காவிட்டாலோ மார்ச் 11ம் தேதி முதல் பால் விற்பனையை நிறுத்த மதுரை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பாக இரண்டு பெரிய கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகரை சந்தித்து மனு அளித்தனர்.

அக்டோபர் 2022 இல், மாநிலத்தில் உள்ள தொழிற்சங்கங்கள் 2022 கொள்முதல் விலை 32ல்  இருந்து 10 மேலும் உயர்த்தக் கூறினர்.

2022 அக்டோபர் 20 அன்று அரசாங்கம் கொள்முதல் விலையை 35 ஆக உயர்த்தியது. ஆனால், கொள்முதல் விலையில் ஏற்பட்ட சொற்ப உயர்வு சங்கங்களை வருத்தமடையச் செய்தது.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவர் வெண்மணி சந்திரன் கூறியதாவது: தனியார் ஏஜென்சிகள், ஒரு லிட்டர் பாலை, 45க்கு கொள்முதல் செய்கின்றன, அதே நேரத்தில், ஆவின் சொசைட்டி கொள்முதல் விலை, சந்தை விலையை விட மிகவும் பின்தங்கியுள்ளது.

பாலை தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து அதிக விலைக்கு விற்க வேண்டும் என விவசாயிகள் பலர் சங்கங்களை வலியுறுத்தி வருகின்றனர். "சமூகத்தின் மீது நாங்கள் வைத்திருக்கும் அக்கறையின் காரணமாக நாங்கள் இன்னும் ஆவின் நிறுவனத்திற்கு விற்பனை செய்கிறோம், ஆனால் கொள்முதல் விலையை சந்தை விலையை விட மிகக்குறைவாக நிர்ணயிப்பது பால்  உற்பத்தியாளர்களுக்கு லாபமற்ற ஒன்று," என்று அவர் கூறினார்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் மதுரை மாவட்ட பொருளாளர் கே.இன்பராஜ் கூறியதாவது: கேரளாவின் பால் கூட்டுறவு சங்கமான மில்மா லிட்டருக்கு 46  வழங்கப்படுகிறது, புதுச்சேரி பால் கூட்டுறவு சங்கம் லிட்டருக்கு 38 வழங்கப்படுகிறது. பக்கத்து மாநில அரசின் கொள்முதல் விலையை ஒப்பிட்டு விலையை உயர்த்துவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்என்று அவர் கூறினார்.

"ஒவ்வொரு விவசாயிக்கும் லிட்டருக்கு 35 கிடைக்காது, கொழுப்பு அளவு மற்றும் திட கொழுப்பு (SNF) அளவு ஆகியவற்றின் அடிப்படையில் 32 வரை குறைக்கப்படும்" என்று இன்பராஜ் கூறினார். திடீரென பால் விநியோகத்தை நிறுத்தினால் உரிமத்தை ரத்து செய்துவிடுவோம் என தொழிற்சங்கங்களை ஆவின் அதிகாரிகள் மிரட்டுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மதுரை மாவட்ட ஆவின் பால் கூட்டுறவு சங்க பொது மேலாளர் டி.ஆர்.டி.சாந்தி கூறியதாவது,"மதுரை மாவட்டத்திற்கு மட்டும் தமிழக அரசு ஊக்கத்தொகை வழங்க முடியாது, கொள்முதல் விலையை உயர்த்தினால் அது மாநிலம் முழுவதும் செய்யப்படும்".

“நாங்கள் கோரிக்கையை மாநில அரசிடம் தெரிவிப்போம். கோரிக்கைகளின் அடிப்படையில் அரசு முடிவு செய்யும்,'' என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

நம்ம சோகமா இருந்தா குடல் பாதிப்படையுமா? குடலை பராமரிக்கும் வழிமுறைகள்

கண் சார்ந்த நோய்களை குணப்படுத்த சூப்பரான 5 டிப்ஸ்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)