MFOI சம்ரித் கிசான் உத்சவ் நிகழ்வானது விவசாயிகளின் வருவாயைப் பெருக்குவதையும், வளமான இந்தியாவின் வளர்ச்சிக்கு வேளாண் பங்களிப்பினை உறுதி செய்வதையும் முதன்மை நோக்கமாக கொண்டு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கிரிஷி ஜாக்ரன் முன்னெடுப்பில் நடைப்பெற்று வருகிறது. அந்த வகையில் நேற்றைய தினம் திருப்பூர் மாவட்டத்தில் தமிழக விவசாயிகளின் பங்கேற்புடன் நடைப்பெற்றது.
தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் அமைந்துள்ள வனாலயத்தில் மஹிந்திரா டிராக்டர்ஸ் நிதியுதவி பங்களிப்போடும், வனம் இந்தியா பவுண்டேசன் ஆதரவோடும் 'வளமான இந்தியாவிற்கான பாதையில் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது' என்ற கருப்பொருளில் MFOI சம்ரித் கிஷான் உட்சாவ் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்தியாவின் முன்னணி நிறுவனமாகிய JCB, Everest போன்றவையும் தங்களது ஆதரவினை இந்த நிகழ்விற்கு வழங்கியிருந்தனர்.
வெட்டிவேர் குறித்து மில்லினியர் விவசாயி விளக்கம்:
GCFPCL அமைப்பின் நிர்வாக இயக்குநர் K.பாலசுப்பிரமணியன், திருப்பூர் மாவட்ட வேளாண் அறிவியல் மையத்தின் தலைமை விஞ்ஞானி முனைவர்.சரவணன் (பூச்சியல் துறை) மற்றும் வனாலயம் உருவாக வித்திட்ட சுந்தர் ராஜன் ஆகியோர் நிகழ்வின் முக்கிய விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
2023 ஆம் ஆண்டிற்கான மில்லினியர் விவசாயிகளில் ஒருவரும், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த இயற்கை விவசாயியுமான கணேசன் வெட்டிவேர் பெருமைகள் குறித்தும், அதற்கான சந்தை வாய்ப்புகள் குறித்தும் விவசாயிகள் மத்தியில் விரிவாக எடுத்துரைத்தார். இதனைத்தொடர்ந்து கிரிஷி ஜாக்ரனின் MFOI 2024- க்கான பரிந்துரை அம்சங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
கருத்தரங்கின் இறுதி நிகழ்வாக முனைவர் சரவணன், தென்னை விவசாயத்தில் நோய் மற்றும் பூச்சி மேலாண்மை குறித்து விவசாயிகள் மத்தியில் உரையாற்றினார். மேலும், மற்ற பயிர்களினை தாக்கும் பூச்சி தாக்குதல் குறித்த விவசாயிகளின் கேள்விகளுக்கும் முனைவர் சரவணன் பல்வேறு தீர்வுகளை வழங்கினார்.
மஹிந்திரா டிராக்டர் நிறுவனம் தனது சமீபத்திய டிராக்டர் மாடல்களை விவசாயிகளுக்கு இந்த நிகழ்வில் காட்சிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
MFOI 2024- விண்ணப்பங்கள் வரவேற்பு:
வேளாண்துறை சார்ந்து கடந்த 26 ஆண்டுகளாக ஊடகவியல் துறையில் இயங்கி வரும் கிரிஷி ஜாக்ரான் மற்றும் அக்ரிகல்ச்சர் வேல்ர்ட் இணைந்து வேளாண் துறையில் அதிதீவிரமாக செயல்படுவதோடு நல்ல வருமானம் ஈட்டும் முன்னோடி விவசாயிகளை கௌரவிக்கும் நோக்கத்தோடு MFOI (millionaire farmer of India) விருது வழங்கும் நிகழ்வினை ஏற்பாடு செய்து இருந்தனர்.
MFOI 2023- நிகழ்வினைத் தொடர்ந்து, Millionaire Farmer of India Awards 2024- நிகழ்வுக்கு விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டுக்கான நிகழ்வில் ஏறத்தாழ 100-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளதாகவும் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. MFOI விருதுகள் 2024- நிகழ்வானது, டிசம்பர் 1 முதல் டிசம்பர் 3,2024 வரை டெல்லியில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Read more:
இயற்கையின் அற்புத கொடை "பூஞ்சைகள்” - ஏன் தெரியுமா?
625 சதுர அடி நிலம் போதும்- நாட்டுக் கோழி வளர்க்க 50 சதவீத மானியம்!