வங்கிகளில் சேமிக்கும்போது, பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ள மினிமம் பேலன்ஸிற்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை அதிரடியாகக் கணிசமாகக் குறைத்துள்ளது எஸ்பிஐ.
வங்கிகளில் நம் பணத்தை சேமிக்கும்போது, மினிமம் பேலன்ஸ் வைக்கவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி குறிப்பிட்ட தொகை கையிருப்பு இல்லாவிட்டால், விதிக்கப்பட்ட மினிமம் பேலன்ஸ் அபராதத்தை கணிசமாகக் குறைத்திருக்கிறது எஸ்பிஐ.
எனவே நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் எவ்வளவு அபராதத் தொகை வசூலிக்கப்படுகிறது என்பதைத் தவறாமல் தெரிந்துக் கொள்ளுங்கள். அதற்கான வசதிகளை வங்கி நிர்வாகம் ஏற்படுத்தியிருப்பதால், தெரிந்துகொள்ளத் தவறாதீர்கள்.
எஸ்பிஐ அதிரடி (SBI Plan)
அந்த வகையில் மினிமம் பேலன்ஸ் அபராதத் தொகையை 75 சதவீதம் குறைத்து எஸ்பிஐ அறிவித்துள்ளது. அதிகபட்சம் ரூ.50 விதிக்கப்பட்ட அபராதம் தற்போது ரூ. 15 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
சிறுநகரங்களில் வசூலிக்கப்பட்டுவந்த ரூ. 40 அபராதம், தற்போது ரூ.12 ஆகவும், கிராமங்களுக்கு ரூ.10 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஜிஎஸ்டி வரி (GST) சேர்த்து வசூலிக்கப்படும். இதைத்தவிர எஸ்பிஐ 3 ஜீரோ பேலன்ஸ் (Zero balance) திட்டங்களை நடைமுறையில் வைத்துள்ளது. இந்த திட்டங்களில் மற்ற சேமிப்பு கணக்குக்களுக்கான அதே வட்டி விகிதம் அளிக்கப்படுவது கூடுதல் தகவல்.
பிற வங்கிகள் (Other Banks)
அதேநேரத்தில் ஆக்சிஸ் வங்கியை பொருத்தவரையில் குறைந்தது 10,000 ரூபாய் மினிமம் பேலன்ஸாக வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் ரூ. 100 முதல் 500 வரை அபராதம் வசூலிக்கப்படும். இந்த தொகையுடன் ஜிஎஸ்டி -யும் அடக்கம்.
பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கியில் நகர வாடிக்கையாளர்கள் தங்களது அக்கவுண்டில் குறைந்தது 2,000ரூ வரை மினிமம் பேலன்ஸாக வைத்திருக்க வேண்டும். கிராம வாடிக்கையாளர்கள் 1000 ரூ வரையில் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும்.இதை பின்பற்றாதவர்களுக்கு ரூ. 25 முதல் 250 வரை அபராதத் தொகையாக வசூலிக்கப்படுகிறது.
மேலும் படிக்க...
அரசின் இலவச ஆட்டுக் கொட்டகைத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? விபரம் உள்ளே!
விவசாயத்திற்கு மின் இணைப்பு பெறுவது இனி ரொம்ப ஈஸி- விபரம் உள்ளே!