News

Thursday, 15 April 2021 04:57 PM , by: Daisy Rose Mary

Credit : Bitcoin exchange

விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் முயற்சியையொட்டி மாதிரி திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் மத்திய வேளாண் அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

மாதிரித் திட்டம்

நாட்டிலுள்ள விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்று மத்திய பாஜக தலைமையிலான மத்திய அரசு உறுதியளித்திருந்தது. அதன் ஒரு பகுதியாக, விவசாயத்துக்கான உள்ளீட்டுப் பொருள்களுக்கான செலவைக் குறைத்தும் அறுவடைக்குப் பிறகான செலவைக் குறைத்தும் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் வகையிலான மாதிரி திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

100 கிராமங்களில் செயல்படுத்தப்படும்

அதற்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் மத்திய வேளாண் அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அந்த விழாவில் மத்திய வேளாண்துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் பங்கேற்றாா். இந்த மாதிரி திட்டமானது 6 மாநிலங்களில் உள்ள 100 கிராமங்களில் ஓராண்டுக்கு செயல்படுத்தப்படவுள்ளது.

வேளாண் இயந்திரமயமாக்கல்

விழாவில் அமைச்சா் தோமா் கூறுகையில், வேளாண் துறையில் லாபத்தை ஈட்டுவதற்குத் தொழில்நுட்ப வசதிகள் உதவும். இது இளைஞா்களை வேளாண்மை நோக்கி ஈா்க்கவும் வழிவகுக்கும். விவசாயிகளுக்கான நிதியுதவித் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ரூ.6,000ஐ வெளிப்படையான முறையில் மத்திய அரசு வழங்கி வருகிறது.

மேலும் படிக்க... 

விலை குறைவால், வேதனையுடன் தக்காளியை ஏரியில் கொட்டிய விவசாயிகள்!

தக தகிக்கும் வெயில்! - ஆடு, மாடு கால்நடைகளுக்கும் தண்ணீர் வழங்க அறிவுரை!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)