News

Wednesday, 03 February 2021 08:22 AM , by: Elavarse Sivakumar

Credit : Naidunia

மிஸ்டு கால் (Missed call ) மற்றும் வாட்ஸ்- ஆப் மூலமாக சமையல் சிலிண்டரை முன்பதிவு செய்யும் வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சிலிண்டர் புக்கிங் (Cylinder booking)

சமையல் சிலிண்டரை முன்பதிவு செய்துகொண்டு வாங்கிப் பயன்படுத்தும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. இதற்காக தானியங்கி புக்கிங்(Booking)சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி பயனடைந்து வருகின்றனர்.

போன் கால், எஸ்எம்எஸ், ஆன்லைன், மொபைல் ஆப், வாட்ஸ் ஆப் போன்ற பல வசதிகள் இருக்கின்றன.

இந்நிலையில், இதனைப் பயன்படுத்துவதில் உள்ள சில சிரமங்களைத் தீர்க்கும் வகையில், மிஸ்டு கால் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இனி மிஸ்டு கால் மூலம் டெலிவரி வாங்குவது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

ஐஓசி (IOC)

இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் மிஸ்டு கால் மூலமாக சிலிண்டர் புக்கிங் செய்யும் சேவையைத் தொடங்கியுள்ளது.

இதன்மூலம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதவர்கள் கூட சாதாரண மொபைல் போன்களில் வெறும் மிஸ்டு கால் கொடுத்து சிலிண்டர் புக்கிங் செய்ய முடியும். இது சிலிண்டர் முன்பதிவுக்கு இந்த முறை மிக எளிதாக உள்ளது.

புக்கிங் செய்வது எப்படி? (How to Book)

இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் சிலிண்டர் முன்பதிவுக்காக 8454955555 என்ற மொபைல் எண்ணை அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களது பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து இந்த எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தாலே போதும். இதில் ஐவிஆர் முறை இல்லை என்பதால் மிக விரைவாக முன்பதிவு செய்ய முடிகிறது.

வாட்ஸ் ஆப் மூலமாகவும் புக்கிங்! (Booking Through Whats-app)

வாட்ஸ் ஆப் மூலமாகவும் இண்டேன் சிலிண்டரை புக்கிங் செய்ய முடியும். உங்களது சிலிண்டர் இணைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணிலிருந்து 7588888824 என்ற எண்ணுக்கு நீங்கள் தொடர்பு கொள்வதன் மூலம் சிலிண்டரை பதிவு செய்யலாம்.

உடனடியாக அந்த எண்ணிலிருந்து உங்களுக்கு உறுதிப்படுத்தும் செய்தி வரும். அதைத் தொடர்ந்து சிலிண்டருக்கான பணத்தைச் செலுத்துவதற்கான லிங்க் ஒன்றும் அனுப்பப்படும். அதன் மூலம் நீங்கள் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, யூபிஐ போன்ற எந்த முறையிலும் பணத்தைச் செலுத்தலாம்.

மேலும் படிக்க...

5 லட்சம் காய்கறி நாற்றுகள் விற்பனை இலக்கு - தோட்டக்கலைத்துறை ஏற்பாடு!

தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிா்ணயம்!

மீன் சாப்பிட ஆசையா? நோய்களுக்கு இரையாகப்போறீங்க உஷார்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)