கைப்பேசி செயலி மூலம் மின் கட்டணம் கணக்கீடு செய்யும் நடைமுறையைப் பிப்ரவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தத் தமிழக மின்வாரியம் முடிவு செய்துள்ளது. சோதனை முயற்சியாக சென்னை மற்றும் வேலூர் மண்டலங்களில் இந்த கணக்கீடு முறை செயல்படுத்தப்பட உள்ளது.
நரேந்திர மோடி அரசு பதவி ஏற்றது முதல், அரசு துறைகளில் டிஜிட்டல் மயமாக்கல் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக,
மின் வாரியத்தின் பல்வேறு சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
செயலி மூலம் கணக்கீடு
இதன் ஒருபகுதியாக, தற்போது சோதனை முறையில் செயலின் மூலம் செல்போன் செயலி மூலம் மின் கட்டணம் கணக்கிடும் முறை அமல்படுத்தப்பட உள்ளது. பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் கைபேசி செயலி மூலம் மின் கட்டணம் கணக்கிடும் முறை சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பபட உள்ளதாக தமிழ்நாடு மின் வாரியம் தெரிவித்திருக்கிறது.
முதல்கட்டமாக சென்னை, வேலூர் மண்டலங்களில் மட்டுமே சோதனை முறையை அமல்படுத்த முடிவு செய்துள்ளனர். நுகர்வோரே மின் கட்டணத்தை கணக்கிடும் வகையில் கைப்பேசி செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
கணக்கீடு செய்வது எப்படி?
-
இந்த செயலியை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து, கட்டணத்தைக் கணக்கீடு செய்து கொள்ளலாம்.
-
செயலியில் மீட்டர் புகைப்படத்தை பதிவேற்றம் செய்த ஒரு சில நிமிடங்களில் மின் கட்டண விவரம், குறுஞ்செய்தியாக நுகர்வோருக்கு அனுப்பப்படும்.
சோதனை முயற்சியாக மின்வாரிய ஊழியர்களுக்கு இந்தச் செயலி வழங்கப்பட்டு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பணிகளை தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக சென்னை மற்றும் வேலூர் மண்டலங்களில் சோதனை அடிப்படையில் இந்த நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது.
மேலும் படிக்க...