மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 6 September, 2020 10:14 AM IST

கிருஷி ஜாக்ரனின் ''Farmer the brand'' நிகழ்ச்சியின் மாதாந்திர திருவிழா செப்டம்பர் 5-ம் தேதி நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் உள்ள முற்போக்கான விவசாயிகள் கலந்துகொண்டு அவர்களின் தயாரிப்புகள் மற்றும் அதனைச் சந்தைப்படுத்தல் விதம் குறித்தும் நிகழ்ச்சியின் மூலம் எடுத்துரைத்தனர்.

செப்டம்பர் 5-ம் தேதி கிருஷி ஜாக்ரன் தனது நிறுவன தினத்தைக் கொண்டாடும் இந்த நேரத்தில், தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து Farmer the Brand பிரபலங்களுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த நிகழ்ச்சியின் மூலம் விவசாயிகள் தங்களுக்கான அடையாளத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் அதன் மூலம் கிடைக்கும் சந்தை வாய்ப்புகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.

உ.பி.யைச் சேர்ந்த இயற்கை வேளாண் விவசாயியும் சுவதேஷ் Swadesh பிராண்ட் நிறுவனருமான பத்மஸ்ரீ பாரத் பூஷண் தியாகி Padma Shri Bharat Bhushan Tyagi, அவர்கள் அங்கக சான்றிதழின் முக்கியத்துவம், மதிப்புக் கூட்டல் மற்றும் பதப்படுத்துதலின் முக்கியத்துவத்தையும் இதன் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கபெரும் வருமானம் குறித்தும் விளக்கினார்.

மத்தியப் பிரதேசத்தின் தர்காரி நேச்சுரல்ஸின் Tarkari Naturals உரிமையாளரான அவினாஷ் சிங் Avinash Singh அவர்கள் இயற்கை வேளாண்மையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு மற்றும் அதன் மூலம் கிடைக்கப்பெரும் வாய்ப்புகள் குறித்தும் விளக்கினார்.

மஞ்சுளா மற்றும் பார்த்திபன் தம்பதி

இதைத் தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த மஞ்சரி தேன் தயாரிப்பு நிறுவனத்தின் தம்பதியினர் மஞ்சுளா மற்றும் பார்த்திபன் (Manjula parthiban) அவர்கள், தங்களின் தேன் தயாரிப்புகள் குறித்து விளக்கினர். சுமார் 33 வகையான தேன் சார்ந்த மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக கூறினர்.

பிராண்ட் இல்லாமல் விற்பனை செய்தால், சந்தைப்படுத்துதல் கடினமாக இருக்கும் என்பதால் தான், மஞ்சரி தேன் (Manjari honey) என்ற பிரண்ட் மூலம் தங்களின் தேன் மதிப்புக்கூட்டு தயாரிப்புகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பார்த்திபன் கூறினார்.தான் ஒரு அரசு பேருந்து ஓட்டுநர் என்றும் தனது பகுதி நேர வேலையாக இந்த தொழிலைத் தனது மனைவியுடன் சேர்ந்து செய்வதாகத் தெரிவித்தார்.

விவசாயிகள் நினைத்தால் எதுவும் சாதிக்க முடியும் என்றும், இதற்கு உழைப்பு மற்றும் நம்பிக்கையுமே மூலதனம் என்றார். மேலும் கிருஷி ஜாக்ரன் Farmer the brand நிகழ்ச்சியின் மூலம் தங்களுக்கு தற்போது அதிகமான ஆடர்கள் வருவதாகக் கூறினார். தற்போது ஆண்டுக்கு 20 லட்சம் வரை வருமானம் கிடைப்பதாகவும் வரும் நாட்களில் இதனை அதிகரிக்கத் திட்டமிட்டு வருவதாகக் கூறினார்.

புதுமையான தொழில்நுட்பங்கள், சொட்டு நீர்ப்பாசனம், கிரீன் ஹவுஸ் மற்றும் பாலி ஹவுஸ் போன்ற அறிவியல் விவசாய நுட்பங்களின் முக்கியத்துவம் குறித்து குஜராத்தைச் சேர்ந்த சத்வா ஆர்கானிக் Satva Organic நிறுவனர் திவேஷ் படேல் Devesh Patel எடுத்துரைத்தார். மேலும் விவசாயிகள் தங்கள் தயாரிப்புகளைச் சர்வதேச அளவிற்குக் கொண்டு செல்ல டிஜிட்டல் தளங்கள் எவ்வாறு பயன் தருகிறது என்பது குறித்தும் விளக்கினார்.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த கோபால் நந்தன் Gopal Nandan என்ற பிராண்டின் உரிமையாளரான சுஹாஸ் பாட்டீல் Suhas Patil மதிப்புக் கூட்டலின் முக்கியத்துவம் மற்றும் பிரீமியம் தரத்தின் அவசியம் குறித்து விளக்கினார். கேரளாவைச் சேர்ந்த ப்ரீதா பிரதாப் Preetha Prathap, மறுபயன்பாட்டுக்குரிய மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களின் மூலம் மேற்கொள்ளப்படும் மதிப்புக்கூட்டுதல் குறித்துப் பேசினார்.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த நவநாத் மல்ஹாரி கப்சேட் Navnath Malhari Kapsate, ஆந்திராவைச் சேர்ந்த இயற்கை விவசாயி ஜகதீஷ் ரெட்டி (Jagadeesh reddy), சத்தீஸ்கரை சேர்ந்த மஞ்சீத் சிங், ஹிம் ஆப்பிள் Him Apple நிறுவனர் ராய் நவ்னீத் சங்கர் சூத் உள்ளிட்ட முன்னணி பிராண்டுகளின் நிறுவனர்கள் தங்களின் பிரத்தியேக விவசாய பொருட்கள் மற்றும் அதனை கையாளும் விதம் குறித்து எடுத்துரைத்தனர்.

இது போன்ற நிகழ்ச்சியின் மூலம் விவசாயிகள் தங்களின் விவசாயம் சார்ந்த யுத்திகளை மற்ற விவசாயிகளுக்கு அறிய செய்கின்றனர். இதன் மூலம் வரும் நாட்களில் அனைத்து விவசாயிகளும் அறியப்படும் பிராண்டாக உருவெடுப்பார்கள் என்பது உண்மையே!

English Summary: Monthly Mahotsav of Farmer the Brand programme hosted by Krishi Jagran !!
Published on: 06 September 2020, 09:31 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now