News

Tuesday, 10 May 2022 12:55 PM , by: Elavarse Sivakumar

தாயுடன் குழந்தையும் படுத்து துாங்கும் வகையில் புதிய படுக்கை வசதி, 70 விரைவு ரயில்களில் ஏற்படுத்த, தெற்கு ரயில்வே திட்டமிட்டு உள்ளது. இந்த வசதி அமல்படுத்தப்பட்டால், சிறுவயதுக் குழந்தைகளுடன் பயணிக்கும் பெண் பயணிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

ரயில்களில் பயணம் செய்யும் தாய்மார்கள், தங்களுக்கென ஒதுக்கப்படும் படுக்கையிலேயேக் குழந்தைகளையும் படுக்க வைக்கும் நிலை தற்போது நடைமுறையில் உள்ளது. இந்த சிக்கலைத் தீர்க்குமாறு, பெண் பயணிகள் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் இந்த பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், வடக்கு ரயில்வேயில், அன்னையர் தினத்தை ஒட்டி, 'லக்னோ மெயில்' ரயிலின் முன்பதிவு பெட்டியில், பெண்கள் பயணம் செய்யும்போது, அவர்களது குழந்தையை பக்கத்தில் பாதுகாப்பாக படுக்க வைக்கும் வகையில், புதிய படுக்கை வசதியை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு, ரயில் பயணிகளிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
இதேபோல், மற்ற கோட்டங்களிலும் ஏற்படுத்த, ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

பயணிகளுக்கான புதிய புதிய வசதிகளை ஏற்படுத்தி தருவதில், ரயில்வே முழு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. முன்பதிவு பெட்டிகளில் பெண்கள் பயணம் செய்யும் போது, அவர்களது குழந்தையை பக்கத்தில் பாதுகாப்பாக படுக்க வைக்க, புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி, தெற்கு ரயில்வேயில் நீண்ட துாரம் செல்லும் முக்கியமான 70 விரைவு ரயில்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றில் 'ஏசி' முன்பதிவு பெட்டிகளில், இந்த வசதியை ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம். இதற்கான பணியை விரைவில் துவங்க உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் படிக்க...

பணிநேரத்தில் ஊழியர்கள் தூங்கலாம்- அனுமதி அளித்த நிறுவனம்!

சாப்பாட்டுக்குப் பிறகு இனிப்பு- இந்தத் தப்பு இனி வேண்டாம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)