மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 9 May, 2023 5:02 PM IST
MoU between TN Government and Mitsubishi Electric India Pvt

தமிழக முதல்வர் முன்னிலையில் மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ.1891 கோடி முதலீட்டில், குளிர்சாதன இயந்திரங்கள் மற்றும் காற்றழுத்தக் கருவிகள் உற்பத்தி ஆலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் நிறுவப்படவுள்ள ஆலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

புரிந்துணர்வு ஒப்பந்த விவரம்:

சென்னையில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மிட்சுபிஷி எலக்ட்ரிக் கார்ப்பரேஷன் மற்றும் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த மிட்சுபிஷி எலக்ட்ரிக் ஏசியா பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் துணை நிறுவனமான மிட்சுபிஷி எலக்ட்ரிக் லிமிடெட் நிறுவனம் 1891 கோடி ரூபாய் முதலீட்டில் அறைகளுக்கான குளிர்சாதன இயந்திரங்கள் (Room Air Conditioners) மற்றும் காற்றழுத்தக் கருவிகள் (Compressors) உற்பத்தி ஆலை அமைப்பதற்கு கட்டமைக்கப்பட்ட ஊக்கச் சலுகைகள் (Structured Package of Assistance) வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழ்நாடு அரசு மற்றும் மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் இடையே மேற்கொள்ளப்பட்டது.

இதன்மூலம் இந்நிறுவனத்தில் 2000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும்.

மேலும், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகா, பெருவயல் கிராமத்தில், மகேந்திரா ஆரிஜின்ஸ்-ல், 52 ஏக்கர் நிலப்பரப்பில் மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவன ஆலை அமைப்பதற்கு முதல்வர் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இந்த திட்டத்தின் முதலீடான 1,891 கோடி ரூபாயும் நூறு சதவிகித அந்நிய நேரடி முதலீடு மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது.

மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட்:

மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட், ஜப்பான் நாட்டை சேர்ந்த உலகளாவிய முன்னணி நிறுவனமான மிட்சுபிஷி எலக்ட்ரிக் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.

தமிழ்நாட்டில் அமையவுள்ள Mitsubishi Electric-ன் தொழிற்சாலை, இந்தியாவில் அதன் முதலாவது அறைகளுக்கான குளிர்சாதன இயந்திரங்கள் (Room Air Conditioners) தயாரிப்பு நிறுவனமாகவும், உலகளவில் குளிர்சாதன இயந்திரங்கள் உற்பத்தியில் ஜப்பான், தாய்லாந்து, சீனா, இங்கிலாந்து, துருக்கி, மெக்சிகோ ஆகிய ஆறு நாடுகளுக்கு அடுத்து, ஏழாவது நாடாகவும் இருக்கும்.

60 சதவீத பெண்களை பணியமர்த்த திட்டம்:

மிட்சுபிஷி எலெக்ட்ரிக் நிறுவனம், ஜப்பானைத் தவிர, வெளிப்புற அலகுகள், உட்புற அலகுகள் மற்றும் காற்றழுத்தக் கருவிகள் (Compressors) ஒரே இடத்தில் உற்பத்தி செய்யும் முதலாவது தொழிற்சாலையாகவும் இது இருக்கும். இந்நிறுவனம் வணிகரீதியான உற்பத்தியை அக்டோபர் 2025-ல் தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்த தொழிற்சாலைகளில் சுமார் 60 சதவிகித பெண்களை பணியமர்த்த திட்டமிடப் பட்டுள்ளது.

பிரத்யேகமான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான வசதியைக் கொண்டிருக்கும் மிட்சுபிஷி எலெக்ட்ரிக் நிறுவனம், புதுமுறைகாணல் (Innovation) மற்றும் நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சியை (Industry 4.0) மேலும் ஊக்குவிக்கும். மிட்சுபிஷி எலெக்ட்ரிக் நிறுவனத்தின் இந்த முதலீடு, அதிக எண்ணிக்கையிலான துணைத் தொழில்களை மாநிலத்திற்கு கொண்டு வந்து, மாநிலத்தின் மின்னணு உற்பத்தியை மேம்படுத்திட உதவும்.

மிட்சுபிஷி எலெக்ட்ரிக் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் காற்றழுத்தக் கருவிகள் பெரும்பாலும் அந்நிறுவனத்தால் தயாரிக்கப்படும் குளிர்சாதன இயந்திரங்களில் பொருத்துவதற்காக பயன்படுத்தப்படும். மேலும், எதிர்வரும் காலங்களில் பிற நிறுவனங்களுக்கு தேவையான காற்றழுத்தக் கருவிகளை உற்பத்தி செய்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் காற்றழுத்தக் கருவிகள் இறக்குமதியை குறைப்பதற்கு வாய்ப்பாக அமையும்.

pic courtesy: CMO tamilnadu (twitter)

மேலும் காண்க:

Cyclone Mocha Live- நாளை உருவாகிறது புயல்.. எவ்வளவு வேகத்தில் காற்று வீசும்?

PMSBY- PMJJBY: குறைந்த பிரீமியத்தில் எந்த காப்பீட்டு திட்டம் பெஸ்ட்?

English Summary: MoU between TN Government and Mitsubishi Electric India Pvt
Published on: 09 May 2023, 05:02 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now