தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட சினிமா நட்சத்திரங்கள் தோல்வியை சந்தித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டசபை பொதுத்தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (மே 2) காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த தேர்தலில், சினிமா பிரபலங்கள் பலரும் தேர்தல் களத்தில் குதித்தனர். அவற்றில் குறிப்பாக நடிகரும், திமுக தலைவர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி மட்டும் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றிப்பெற்றார்.
நட்சத்திர வேட்பாளர்கள் தோல்வி
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் மிக குறைவான ஓட்டு வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து, பிறகு பின்னடைவில் இருக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் அனைவரும் தோல்வியை சந்தித்துள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகை ஸ்ரீப்ரியா, விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட பாடலாசிரியர் சினேகன், பா.ஜ., சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட நடிகை குஷ்பு, திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரும், இயக்குனருமான சீமான் ஆகியோர் பெரும் தோல்வியை சந்தித்துள்ளனர். அதேபோல், நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறி தனிக்கட்சி துவக்கி, தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான், விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட நடிகர் மயில்சாமி ஆகியோரும் தோல்வியடைந்துள்ளனர்.
திமுக முன்னிலை
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், திமுக கூட்டணி தற்போது வரை 156 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக கூட்டணியில் அதிமுக 78 தொகுதிகளிலும், பாமக 5 தொகுதிகளிலும், பாஜக 4 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. திமுக தலைவர் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது.
மேலும் படிக்க
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி! 5 முனை போட்டியில் வென்று, 6 வது முறைய திமுக ஆட்சி!