இன்று பிறந்த நாள் கொண்டாடும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இயற்கை விவசாயம் முறையில் பழ சாகுபடியை செய்து வருகிறார் என எத்தனை பேருக்கு தெரியும். பலரும் வேறு தொழில் வாய்ப்புகளை தேடி வரும் நிலையில் முழு இயற்கை விவசாயியாகவே மாறி வருகிறார் நம்ம தல தோனி!
சொந்த பண்ணை வீட்டில் பழ சாகுபடி
கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஒதுங்கியே காணப்படும் எம்.எஸ்.தோனி அண்மையில் கருங்கோழிப் பண்ணையை தொடங்கி பராமரித்து வருகிறார். சொந்த ஊரான ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தான் தோனி உள்ளார். ராஞ்சியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் உள்ள 40 முதல் 50 ஏக்கர் வரையிலான விவசாய நிலத்தில் இயற்கை முறைப்படி, ஸ்ட்ராபெர்ரி, மாம்பழம், பப்பாளி மற்றும் வாழை உள்ளிட்டவற்றை பயிரிட்டு வளர்த்து வருகிறார்.
உற்பத்தி முதல் விற்பனை வரை - தோனி
அதுமட்டுமின்றி இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உரத்தின் மூலமே தனது இடத்தில் தோனி விவசாயம் செய்து வருகிறார். தனது தோட்டத்தில் அந்த உரம் தரும் விளைச்சலைப் பொறுத்து, அதனை அனைத்து விவசாயிகளுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் உர விற்பனையை தோனி தனது தரப்பிலிருந்து தொடங்கவுள்ளதாக தெரிகிறது. பழங்கள் உற்பத்தி முதல் விற்பனை வரை அனைத்தையும் தோனியே நிர்வகித்து வருகிறார்.
விவசாய களத்தில் தோனி:
தோனி தனது கிரிக்கெட் பேட்டிங் ஸ்டைலில் இந்த பழ விற்பனை சந்தையை கைப்பற்ற விரும்புகிறார். தனது தயாரிப்புகளுக்கு குறைந்த அல்லது போட்டி விலையை நிர்ணயிப்பதன் மூலம், அவர் இந்த விவசாய களத்திலும் நீண்ட நாட்கள் நீடிக்க விரும்புகிறார்.
மேலும் படிக்க:
M.S தோனி: 2023 CSK டிம் கேப்டன் ஆவரா? இல்லையா? ஓஜாவின் பதில் என்ன?