News

Friday, 29 November 2019 02:58 PM , by: Anitha Jegadeesan

கைவினை பொருட்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. கயிறு பொருட்களினால் செய்யப்பட்ட பொருட்கள் இந்தியாவிலிருந்து அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. உள்நாட்டிலும் நகரங்கள் மற்றும் பெரிய நகரங்களைத் தாண்டி, பிற பகுதிகளிலும் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கயிறுப் பொருட்களின் விற்பனையை உள்நாட்டில் அதிகப்படுத்த, மத்திய அரசின் கயிறு வாரியம் மூலமாக   நாட்டின் பல்வேறு இடங்களில் விற்பனை மையங்களை அமைத்துள்ளது. விற்பனையினை அதிகப்படுத்தவும், அனைத்து தரப்பினர் பயன்படுத்துவதற்கு எதுவாகவும்,  கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காகவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் பாரம்பரிய தொழில்கள் மீள் உருவாக்க நிதித் திட்டத்தின் (எஸ்எஃப்யுஆர்டிஐ) கீழ் ஏற்கனவே 40 ற்கு மேற்பட்ட  கயிறு தொழில் தொகுதிகளை ஏற்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 16 தொகுதிகள் செயல் பட தொடங்கி  உள்ளன என்றார்.  இதற்காக சென்னை, மும்பை போன்ற பெரு நகரங்களில் புதிய விற்பனை மையங்கள் திறக்கப்பட்டுள்ளது.

தற்போது அரசு பழைய விற்பனை மையங்களை புதுப்பித்து வருகிறது.  அதன் படி  இந்தூர், நவி மும்பை, லக்னோ, பாட்னா, திருவனந்தபுரம் மற்றும் வாரணாசி போன்ற  இடங்களில் உள்ள விற்பனை மையங்கள் கயிறு வாரியத்தால் ஏற்கனவே புதுப்பிக்கப்பட்டு விட்டன. சென்னை, மும்பை, அகமதாபாத், ஜெய்ப்பூர், ஜம்மு ஆகிய இடங்களில் உள்ள விற்பனை மையங்கள் புதுப்பிக்கும் பணி நடை பெற்று வருகிறது.

கயிறு உற்பத்தித் தொழிலை இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில்  நவீனப்படுத்தும் நோக்கில், பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. கயிற்றால் தயாரிக்கப்படும் அனைத்து பொருட்களையும், குறிப்பாக  துணி வகைகளுக்கு இந்திய தர நிர்ணய அமைப்பின் சான்றிதழ் பெறப்பட்டிருப்பதுடன், கதர் கிராமத் தொழில் கழகத்துடன் இணைந்து விற்பனை செய்ய உள்ளது. தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் தொழில் துறை கண்காட்சிகளில் கயிறு பொருட்களை கயிறு வாரியம் இடம்பெறச் செய்து வருகிறது.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)