நடப்பு கரீப் பருவ சந்தைக் காலத்தில் கரீப் பருவப் பயிர்களை, விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அரசு தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது. கடந்தாண்டை விட இந்தாண்டு நெல் கொள்முதல் 24.91 சதவீதம் அதிகரித்துள்ளது
பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, உத்தரகாண்ட், தெலங்கானா, சண்டிகர், ஜம்மு காஷ்மீர், குஜராத், ஆந்திரப்பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், பிகார், சத்திஸ்கர், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்டில் நெல் கொள்முதலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
நெல் கொள்முதல் அதிகம்
டிசம்பர் 25 வரை 449.83 இலட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டில் இதே காலத்தில் 360.09 இலட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது. கடந்தாண்டை விட இந்தாண்டு நெல் கொள்முதல் 24.91 சதவீதம் அதிகம். இந்தாண்டில் இது வரையிலான மொத்தக் கொள்முதலில், பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 202.77 இலட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
நடப்பு கரீப் சந்தைக் காலத்தில் 55.49 இலட்சம் விவசாயிகள் ஏற்கனவே பயனடைந்துள்ளனர். இவர்கள் தங்களது விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.84928.10 கோடி பெற்றுள்ளனர்.
மேலும், மாநிலங்கள் வேண்டுகோள் படி, தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, குஜராத், ஹரியானா, உத்தரப்பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் ஆந்திரப்பிரதேசத்திலிருந்து 51.66 இலட்சம் மெட்ரிக் டன் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் ஆதரவு விலையில் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
பயிர்களைப் பக்குவமாகப் பாதுகாக்கும் பத்திலைக் கஷாயம்!
மேலும், ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து 1.23 இலட்சம் மெட்ரிக் டன் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சந்தை விலை, குறைந்தபட்ச ஆதரவு விலையை விட குறைந்தால், மற்ற மாநிலங்களில் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் கொள்முதல் செய்ய, வேண்டுகோள் அடிப்படையில் ஒப்புதல் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கட்செவி அஞ்சலில் வேளாண் தகவல் பெற செல்போன் எண் அறிவிப்பு!