1.உளுந்து, பச்சைப்பயறு நேரடி கொள்முதலுக்கு விலை நிர்ணயம்
மத்திய அரசின் ஆதார விலை திட்டத்தின்கீழ் உளுந்து, பச்சைப்பயறு நேரடி கொள்முதலுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வேளாண் விற்பனை-வேளாண் வணிகத்துறை நாகப்பட்டினம் விற்பனை குழு செயலாளர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இங்கு மத்திய அரசின் ஆதார விலை திட்டத்தின் மூலம் தமிழக முதல்-அமைச்சர் மற்றும் நாகை மாவட்ட கலெக்டர் ஆகியோரின் பரிந்துரையின்படி 2023-ம் ஆண்டில் உளுந்து, பச்சைப்பயறு ஆகியவை நேரடியாக கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதற்காக உளுந்து கிலோ ஒன்றுக்கு ரூ.66 என்றும், பச்சைப்பயறு கிலோ ரூ.77.55 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2.தென்னை மரங்களில் புது வகையான பூஞ்சான நோய்
தற்போது தென்னை மரங்களில் புது வகையான பூஞ்சான நோய் பரவி வருகிறது. இந்த நோயை முற்றிலும் ஒழிக்க விவசாயிகள் ஒத்துழைப்புடன் வேளாண் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நோயானது குறைந்த (3-5) வயதுடைய தென்னை மரங்களை எளிதில் தாக்க வல்லது.நோயின் அறிகுறியாக இளங்கன்றுகளின் குருத்துகள் பழுப்பு நிறமாக மாறி பின் காய்ந்து விடும். எனவே விவசாயிகள் தங்கள் தென்னந்தோப்பினை உற்று கவனித்து இந்த நோய்க்கான அறிகுறிகள் ஏதும் தென்பட்டால் உடனடியாக வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் தகவல் அளிக்க வேண்டும்.
தாக்கப்பட்ட மரங்கள் உடனடியாக இறக்க நேரிடுவதால் நோயின் தீவிரத்தை அறிந்து விவசாயிகள் இளம் தென்னை மரங்களில் காண்ட் ஆப் 2 மில்லி லிட்டரை 1 லிட்டர் நீரில் கலந்து ஒவ்வொரு தென்னை மரத்தின் நடுக் குருத்திலும் அரை லிட்டர் வீதம் ஊற்ற வேண்டும் விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே இதை விவசாயிகள் கடைப்பிடித்து புதுவகைபூஞ்சான நோயில் இருந்து தென்னை மரங்களை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
3.அதல பாதாளத்துக்கு சென்ற முருங்கை
தற்போது உடுமலை பகுதியில் பல இடங்களில் பரவலாக முருங்கை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது முருங்கைக்காய் விலை அதல பாதாளத்துக்கு சென்றுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- கரும்பு முருங்கை 'பனை மரங்களைப்போல அடி முதல் நுனி வரை பயன்படக்கூடியது முருங்கை மரங்களாகும். ஆனாலும் முருங்கை இலை மற்றும் பூக்களை மதிப்புக்கூட்டி முருங்கை பவுடர் போன்ற பொருட்களைத் தயாரிக்க போதிய வழிகாட்டல்கள் இல்லை.என்று தெரிவித்துள்ளனர்.
தற்போது ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ. 5 முதல் ரூ. 8 வரையே விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் கடும் இழப்பை சந்தித்துள்ளனர்.
4.மர்ம நோய் தாக்குதல் சவ்சவ் பயிர்கள் நாசம்
சிறுமலையில் விளையும் சவ்சவ் மினுமினுப்புடன் இருக்கும். அதேபோல் இதர பகுதிகளில் விளையும் சவ்சவ்வை விட, சிறுமலை சவ்சவ் சுவை மிகுந்தது.
சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் சவ்சவ் இங்கு பயிரிடப்பட்டு இருக்கிறது.
விவசாயிகள் அறுவடைக்கு தயாரான நிலையில், சவ்சவ் கொடிகளில் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இந்த நோய் தாக்குதலால் பச்சை நிறத்தில் இருந்த சவ்சவ் காய்கள் பழுப்பு நிறத்துக்கு மாறி வருகின்றன. இது விவசாயிகளை பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பழுப்பு நிறத்தில் மாறியதால் சவ்சவ் காய்களை வியாபாரிகள் வாங்காமல் தவிர்த்து செல்கின்றனர். இதனால் விளைந்த சவ்சவ் காய்கள் அறுவடை செய்யாமல் கொடிகளிலேயே விடப்பட்டுள்ளன. மேலும் அந்த நோய் அடுத்தடுத்த கொடிகளுக்கு பரவி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். எனவே சவ்சவ் கொடிகளில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5.விருதுநகர் மார்க்கெட்டில் நல்லெண்ணெய் விலை உயர்வு
கடலை எண்ணெய் 15 கிலோவிற்கு ரூ.50 விலை குறைந்து ரூ.3,050 ஆகவும், நல்லெண்ணெய் 15 கிலோவிற்கு ரூ.165 விலை உயர்ந்து ரூ.6,600 ஆகவும், பாமாயில் 15 கிலோவிற்கு ரூ.65 விலை உயர்ந்து ரூ.1,575 ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் ரூ.2,500 ஆகவும் விற்பனையானது.
6.சுட்ட்டேரிக்கும் வெயில் மேலும் அதிகரிக்கும்
அடுத்த ஐந்து நாட்களுக்கு இந்தியாவின் பல பகுதிகளை வெப்ப அலை தாக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரும் எனவும் எச்சரிக்கை.
7.ஆந்திராவில் 15 அரிய வகை கனிமங்கள் கண்டுபிடிப்பு
ஜம்மு - காஷ்மீரை தொடர்ந்து, ஆந்திராவில் 15 அரிய வகை கனிமங்கள் பூமிக்கு அடியில் கண்டுபிடிப்பு
மருத்துவத் தொழில்நுட்பம், விண்வெளி உள்ளிட்ட பல்வேறு தொழில்துறை பயன்பாடுகளில் முக்கிய பங்காற்றும் எனத் தகவல்.
மேலும் படிக்க
ரேஷன் கடைகளிலேயே இனி இ-சேவை மையங்கள்: தமிழக அரசின் புதிய திட்டம்!
CRPF தேர்வு- இந்தி தெரியாத இளைஞர்கள் என்ன செய்வார்கள்? முதல்வர் காட்டம்