ஆடு வளர்பவர்களுக்கான செயலியை திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லுரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இணைந்து உருவாக்கி உள்ளது. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கால்நடை வளர்ப்போர் மற்றும் விவாசகிகள் பயன் பெறும் வகையில் இது செயல் படும்.
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் ரூ.6.44 லட்சத்தில் இந்த செயலி உருவாக்க பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரமாக ஆடு வளர்ப்பு உள்ளது. தற்போதைய கணக்கின் படி திருநெல்வேலி மாவட்டத்தில் 3,03,105 செம்மறி ஆடுகளும், 3,30,230 வெள்ளாடுகளுக்கும் இருக்கின்றன.
செயலி குறித்த களப்பணி
இந்த செயலி உருவாகும் முன்பு இது தொடர்பாக பல்வேறு நபர்களிடம் கருத்து கேட்டக பட்டது.இதற்காக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 100 ஆடுவளர்ப்பவர்கள், 60 கால்நடை விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் 40 கால் நடை மருத்துவ கல்லூரி தொழில் நுட்ப நிபுணர்களிடம் தகவல்கள் சேகரிக்க பட்ட தகவலின் அடிப்படையில் இந்த செயலியை வடிவமைத்துள்ளனர்.
செயலின் சிறப்புகள்
- இந்தியாவிலேயே ஆடுகளுக்காக உருவாக்க பட்ட முதல் செயலி. இதன் தகவல்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வடிவமைக்க பட்டுள்ளது.
- இந்த செயலியில் ஆடு வளர்ப்பு, தீவனம் மேலாண்மை, தீவன பராமரிப்பு, இனப்பெருக்கம், ஆடுகளை சந்தை படுத்துதல், ஆடுகளை வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை போன்ற தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
- ஆட்டிறைச்சி விற்பனை செய்பவர்களுக்கு என்று பல தகவல்கள் உள்ளன.அதில் நவீன வசதிகளுடன் கூடிய இறைச்சி கூடம், மதிப்பு கூட்டப்பட்ட இறைச்சி பொருட்கள் தயாரித்தல், வெள்ளாட்டு பால் மற்றும் அதன் ஊட்டச்சத்துக்கள் போன்ற விவரங்கள் உள்ளன.
- தோல் சந்தை நிலவரம், ஆட்டின் எலும்புகளில் இருந்து தயாரிக்க படும் கோழி தீவனம், கொம்பு மற்றும் குளம்பு போன்றவற்றை கொண்டு ஆபரணங்கள் தயாரித்தல் போன்ற விவரங்கள் உள்ளன.
- ஆடுகளுக்கு ஏற்படும் நோய்கள், தடுப்பூசி கால அட்டவணை, குடற் புழுக்கள் நிக்கல் கால அட்டவணை, நுண்ணுயிரினால் ஏற்படும் நோய்கள், மார்பு சளியினை குறைப்பதற்கான மருந்துகள் என எண்ணற்ற குறிப்புகள், விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன.
- விற்பனைக்கு வரும் ஆடுகளை பற்றிய விவரங்கள், வங்கி கடன் பெறுவது எப்படி?, காப்பீடு பெறுவது போன்ற தகவல்கள் உள்ளன.
- சிறப்பு அம்சமாக இதில் கால்நடை வளர்பவர்களுக்கான கேள்வி-பதில் நேரம், புதிய அறிவிப்பு, தகவல்களை தேடுதல் மற்றும் வாட்ஸ்அப் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
செயலியை பதிவிறக்கம் செய்தல்
இந்த செயலியை https://bit.ly/2XfizXs மூலம் பதிவிறக்கம் செய்யலாம். ஒரு முறை பதிவிறக்கம் செய்து விட்டால் இணையதள வசதி இல்லாமலும் இதனை பயன்படுத்தி கொள்ளலாம்.