தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி நேற்று ஒரு புதிய அறிவிப்பினை வெளியிட்டது. அதில் ரூ 700 கோடி வரையிலான முதலீடு செய்ய முன் வந்துள்ளது. வேளாண், உணவு மற்றும் கிராமப்புற வளர்ச்சி போன்றவற்றிற்காக ரூ 700 கோடி முதலீடு ஒதுக்கீடு செய்துள்ளது.
தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியானது கிராமப்புற மேம்பாட்டிற்காகவும், வேளாண்துறையில் முன்னேற்றம் அடையவும் உதவ முன் வந்துள்ளது. அதன்படி தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி வேளாண், உணவு, போன்ற துறை சார்ந்தவர்கள், மற்றும் அந்த துறையினில் தொழில் தொடங்க முன் வருபவர்களை ஊக்குவிக்கும் வகையில் இத்தகைய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
கிராமப்புற வளர்ச்சிக்காகவும், வேளாண்துறை வளர்ச்சிக்காகவும் ரூ 500 கோடி வரை முதலீடு வழங்க செய்ய முன்வந்துள்ளது. மேலும் தேவை இருப்பின் ரூ 200 கோடி வரை முதலீடு செய்யும் என அந்த வங்கியின் இயக்குனர் ஹர்ஷ் குமார் பன்வலா கூறினார்.
இதற்கு தேவைப்படும் நிதியினை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள முதலீட்டாளர்களிடம் இருந்து பெற திட்டமிட்டுள்ளதாக கூறி உள்ளது. மேலும் இது போன்ற முதலீடுகள் இந்த தொழில் ஈடுபட்டவர்களுக்கும், ஈடுபட நினைப்பவர்களுக்கும் ஊக்கமாக இருக்கும். வேளாண்துறையிலும், உணவுத்துறையிலும், கிராமப்புற மேம்பாட்டிலும், மக்களின் வாழ்க்கைத்தரத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி இதுவரை 16 நிறுவனங்களில், சுமார் ரூ 273 கோடி வரை முதலீடு செய்துள்ளது. இப்போது இந்த வங்கியானது கிராமப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்துறையில் புதிய யுக்தி போன்றவைகளில் அதிக கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளது.