News

Thursday, 04 July 2019 12:37 PM

விவசாகிகளை மகிழ்விக்கும் வகையில் நெல், பருப்பு வகைகள் மற்றும் தனியங்களுக்கு குவிண்டாலுக்குயினை நிர்ணயித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடை பெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் குழு கூட்டத்தில் இதற்கான முழு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

2019-20 ஆம் ஆண்டிற்கான காரிஃப் பருவத்துக்கு, குறைந்தபட்ச ஆதரவு விலையினை நிர்ணயத்துள்ளது. இதற்கான அறிவிப்பை வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தாமோதர் வெளியிட்டார். நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு 3.5% உயர்த்தியுள்ளது.

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ 65 உயர்த்தி  குவிண்டாலுக்கு ரூ 1,815 ஆக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதே போன்று மற்ற தானியங்கள், பருப்பு வகைகளுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி உள்ளது.   

உயர்த்த பட்ட மற்ற பயிர்களின் விவரங்கள்

சோளம்  - ரூ 120

ராகி -  ரூ 253

துவரம் பருப்பு - ரூ 215

பாசி பருப்பு - ரூ 75

உளுத்தம் பருப்பு - ரூ 100

நிலக்கடலை - ரூ 200

சோயபின் -  ரூ 311

நடுத்தர ரக பருத்தி -  ரூ 105

நீண்ட ரக பருத்தி - ரூ 100

Anitha Jegadeesan
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)