நாடு முழுவதும் செப்டம்பர் 12ம் தேதி நீட் தேர்வு (NEET Exam) நடைபெறும் என ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நீட் தேர்வு எழுத மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நீட் தேர்வு
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு நீட் தேர்வு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ந்தேதி நீட் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. தற்போது நடப்பாண்டுக்கான மருத்துவ படிப்புகளுக்கு மாணவ-மாணவிகளை தேர்வு செய்ய ஆகஸ்டு 1-ந்தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நீட் தேர்வுக்காக விண்ணப்பம் செய்யும் நடவடிக்கைகள் இன்னும் தொடங்கப்படவில்லை. பொதுவாக நீட் தேர்வுக்கு மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்க தேர்வு தேதிகளில் இருந்து 60 நாட்களுக்கு முன்பு அவகாசம் வழங்கப்படும். ஆனால் தற்போது இதுவரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால் நீட் தேர்வு தொடர்பாக நாடு முழுவதும் மாணவர்களிடம் மாறுபட்ட கருத்துகளும், எதிர்பார்ப்புகளும் நிலவுகிறது.
இந்நிலையில் நீட் நுழைவு தேர்வு செப்.12-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. மேலும், இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனையடுத்து நீட் தேர்வு விண்ணப்பத்தை (Application) நாளை மாலை 5 மணி முதல் இணையதளத்தில் பதிவிறக்கி விண்ணப்பிக்கலாம் என்றும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த முறை 198 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
1500 ஆக்சிஜன் ஆலைகள் விரைவில் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் அறிவுறுத்தல்!
மன உளைச்சலில் மருத்துவர்கள்: தீர்வு காண உதவி மையம்!