இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக பிரதமர் மோடி தனது சமூக வலைதள கணக்குகளின் 'புரொபைல் பிச்சர்' எனப்படும் சுயவிபர படமாக, நம் நாட்டின் தேசியக் கொடியான மூவர்ணக் கொடியை மாற்றியுள்ளார். இது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
75வது சுதந்திர தினம் (75th Independence day)
நம் நாட்டின் 75வது சுதந்திர தினத்தை வருகின்ற ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி கொண்டாட இருக்கிறோம். இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, சிறப்பாக நடந்து வருகிறது. ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி என்ற திட்டத்தின்படி, ஆகஸ்ட் 13 முதல் 15 ஆம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் மூவர்ண தேசியக் கொடியை ஏற்ற பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
தேசியக் கொடி (National Flag)
மேலும், தேசியக் கொடியை வடிவமைத்த பிங்காலி வெங்கையாவின் பிறந்த நாளான, ஆகஸ்ட் 2 முதல், சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 வரை, மக்கள் அனைவரும் சமூக வலைதள கணக்குகளில் 'புரொபைல் பிச்சர்' எனப்படும் சுயவிபர படமாக, மூவர்ணக் கொடியை வைக்க வேண்டும். எனவும் வலியுறுத்தினார்.
அதன்படி, இன்று (ஆகஸ்ட் 2) பிரதமர் நரேந்திர மோடி, தனது சமூக வலைதளப் பக்கங்கள் அனைத்திலும் தேசியக் கொடி படத்தை ‛புரொபைல் பிச்சராக' வைத்து பதிவிட்டுள்ளார். இதனையடுத்து பலரும் தங்களது சுயவிபர படத்தை மாற்றி நாட்டின் 75வது சுதந்திர தினத்தை மிகப் பெரும் மக்கள் இயக்கமாக கொண்டாடி வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இதுபோல் மாற்றி உள்ளார்.
மேலும் படிக்க
75வது சுதந்திர தினம்: வீடுகள்தோறும் தேசியக்கொடி ஏற்ற பிரதமர் வேண்டுகோள்!