நாளுக்கு நாள் சுற்றுப்புற சூழல் மாசடைந்து வருகிறது. இதனால் மனிதர்கள் மட்டுமல்லாது, பறவைகள், விலங்குகள், சிறு உயிரினங்கள், மரம், செடிகொடிகள் என அனைத்து ஜீவராசிகளும் பாதிக்கப்படுகின்றன.
"நீரின்றி அமையாது இவ்வுலகு" என்பது ஐயன் வள்ளுவன் வாக்கு. நீர் நிலைகளை பாதுகாப்பது அனைவரின் கடமையாகும்.நீர் நிலைகள் வற்றி போவதற்கு முறையான பராமரிப்பு இல்லாததே காரணமாகும்.
தற்போதுள்ள பெரும்பாலான நீர்நிலைகள் அசுத்தமாக இருப்பதாகவும், அதனை சுத்தப்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன்படி பசுமை தீர்ப்பாய தலைவர் ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வு முன்பு, நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் முதல்கட்டமாக 351 நதிகளை தூய்மைப்படுத்த வேண்டும் . இதற்காக மத்திய கண்காணிப்பு குழு ஒன்று அமைக்கபடும். இக்குழுவில் நிதி ஆயோக் பிரதிநிதி, மத்திய அமைச்சக செயலாளர்கள் மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் உள்ளிட்டோர் இடம் பெறுவார்கள். ஜூன் 30-ந்தேதி கலந்து உரையாடி பின்னர், நேரில் ஆய்வு நடத்தி ஜூலை 31 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார்.
Anitha Jegadeesan
Krishi Jagran