பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 7 December, 2018 2:00 PM IST

மக்காச்சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர்களைத் தாக்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் அமெரிக்கன் படைப்புழுக்களை அழிக்கும் `ரெடுவிட்' (Reduvid) பூச்சிகள் விருதுநகரில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 6 லட்சம் ஹெக்டேரில் மக்காச்சோள பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதில் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 24 ஆயிரம் ஹெக்டேர் ஆகும். இந்த ஆண்டு மக்காச் சோளப் பயிரில் அமெரிக்கன் படைப்புழுக்கள் தாக்குதல் காணப்படுகிறது.

பூச்சி மருந்துகளுக்கு இந்தப் புழுக்கள் கட்டுப்படுவதில்லை. இதனால், விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பாரம்பரிய ரகங்கள் தவிர, மற்ற அனைத்து மக்காச்சோளப் பயிர்களும் சேதமடைந்துள்ளன.

இப்படைப்புழுக்களைக் கட்டுப்படுத்தி அழிக்கும் `ரெடுவிட்' பூச்சிகள் விருதுநகர் அருகே உள்ள வடமலைக்குறிச்சி கிராமத்தில் விருதை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் சுமார் 10 ஆயிரம் பூச்சிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

தற்போது பச்சை நிறப் பயிர்களைத் தாக்கி அழிக்கும் புழுக்களை (Catter piller) கொல்வதற்காக `ரெடுவிட்' என்ற பூச்சி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தற்போது 10 ஆயிரம் பூச்சிகள் வெளியிட தயாராக உள்ளன. இப்பூச்சி கத்தரிக்காய் காய்ப்புழு, வெண்டைக்காய் காய் புழு, தக்காளி காய்புழு, மக்காச்சோள படைப்புழு போன்ற அனைத்து வகையான புழுக்களையும் தாக்கி அழித்து உண்ணக் கூடியது.

இப்பூச்சி ஹைதராபாத்தில் உள்ள தேசிய பயிர் ஊட்ட மேலாண்மை மையத்திலிருந்து (என்.ஐ.பி.எச்.எம்.) பெறப்பட்டு தமிழகத்தில் முதன்முறையாகவும், நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. படைப்புழுக்கள் தாக்குதலுக்கு ஆளான பயிரில் ஓர் ஏக்கருக்கு 10 ஜோடி `ரெடுவிட்' பூச்சிகள் போதுமானது. இவை 45-வது நாளிலிருந்து 3 நாட்களுக்கு ஒரு முறை 45 முதல் 50 முட்டைகள் இட்டு குஞ்சு பொறிக்கும். அவை மீண்டும் அடுத்த 45 நாட்களில் முட்டைகளை இட்டு குஞ்சு பொறிக்கும். பச்சையத்தைத் தின்று வாழும் அனைத்து வகைப் புழுக்களையும் `ரெடுவிட்' பூச்சிகள் முற்றிலுமாக அழித்துவிடும்.

English Summary: Natural enemies to control Fall Army worm
Published on: 07 December 2018, 01:33 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now