நஞ்சில்லா உணவு உற்பத்தியில் தமிழ்நாடு இயற்கை விவசாய தரச்சான்றளிப்புத் துறையின் பங்கு மிக முக்கியமானது. தரச்சான்று பெற்று உற்பத்தி செய்யப்படும் இயற்கை வேளாண் விளை பொருட்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். எனவே திருவள்ளுர் மாவட்டத்தில் இயற்கை விவசாயம் (Natural Agriculture) செய்யும் விவசாயிகள் தனிநபராகவோ, குழுவாகவோ, வணிக நிறுவனமாகவோ பதிவு செய்துகொள்ளலாம். இயற்கை விளைபொருட்களை பதன் செய்வோரும், ஏற்றுமதி செய்வோரும் பதிவு செய்யலாம்.
பார்த்தீனிய களையை அழிக்க உதவும் மெக்சின் வண்டுகள்
அங்ககச் சான்று (Organic proof)
நாம் நமது அடுத்த தலைமுறைக்கு மாசற்ற வேளாண் முறையை தருவதோடு மட்டுமல்லாமல், ஆரோக்கியமான உணவுக்கும் வழிவகை செய்ய அங்ககச் சான்று பெறுவது மிகவும் அவசியமாகிறது.
தரச்சான்றிதழ் (Certification)
எனவே, விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் விளை பொருட்களுக்குத் தமிழ்நாடு அரசின் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று துறையால் குறைந்த கட்டணத்தில் தரச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இயற்கைத் தன்மை (Naturalness)
இயற்கை முறையில் விளை விக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும்பொழுது அவற்றிற்கான தரச்சான்று இருக்கும் பட்சத்தில் அதன் இயற்கைத் தன்மை உறுதி செய்யப்படுகிறது.
ஏற்றுமதி வாய்ப்பு (Export opportunity)
தமிழ்நாடு அரசின் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையால் அளிக்கப்படும் தரச்சான்றிதழ், மத்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் மூலம் அங்கக உற்பத்திக்கான தேசிய திட்டத்தின்படி அளிக்கப்படுகிறது. இந்த தரச்சான்றிதழ் மூலம் விளைவிக்கப்படும் அங்கக விளைபொருட்களை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம்.
தொடர்புக்கு
பதிவு செய்ய விரும்புவோர் உரிய பதிவு கட்டணம் செலுத்தி தரச்சான்று பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு திருவள்ளுர், பெரியகுப்பம், 6/24, லால் பகதூர் சாஸ்திரி தெருவிலுள்ள விதைச்சான்று மற்றும் இயற்கை விவசாய தரச்சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என உதவி இயக்குநர் நா.ஜீவராணி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க