இந்தியன் ஆயில், சென்னை பெட்ரோலிய நிறுவனம் இணைந்து, நாகை மாவட்டத்தில், 31 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் செலவில் அமைக்க உள்ள, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு, பிரதமர் நரேந்திர மோடி, இன்று(பிப்.,17) அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் பேசுகையில், இயற்கை எரிவாயுவை (Natural gas), ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
சூரிய மின்உற்பத்திக்கு ஊக்கம்!
இந்தியாவில், எரிசக்தி தேவை அதிகரித்து வருகிறது. உள்நாட்டு தேவையை நிறைவு செய்ய 85 சதவீத எரிபொருள் இறக்குமதி (Energy imports) செய்யப்படுகிறது. எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் உள்நாடு, வெளிநாடு முதலீடுகளை (Investment) ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன் மூலம் தென் இந்தியாவில் பல்வேறு பகுதிகள் பயன்பெறும். மாற்று எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க சூரிய மின்உற்பத்திக்கு (Solar power generation) ஊக்கம் அளிக்கப்படுகிறது. எல்இடி பல்புகளை பயன்படுத்துவதன் மூலம் மின்சாரதேவை குறைக்கப்பட்டு வருகிறது. சூரிய மின்சாரத்தில் இயங்கும் மோட்டார்கள் (Solar motors) விவசாயிகளுக்கு உதவியாக இருக்கின்றன.
இந்தியாவில் அதிரிக்கும் எரிசக்தி தேவையை சமாளிக்க மாற்று எரிசக்திகள் உதவியாக இருக்கும். இந்தியாவின் முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் (Metro Rail) சேவை துவங்கப்பட்டுள்ளது. சுத்தமான மற்றும் பசுமையான எரிசக்திக்காகவும், எரிசக்திக்காக மற்ற நாடுகளை சார்ந்திருப்பதை குறைக்கவும் அதற்காக உழைப்பது நமது அனைவரின் கடமை. கடந்த 2019-2020ம் ஆண்டில், உள்நாட்டின் தேவைக்காக இந்தியா 85 சதவீத எண்ணெய் மற்றும் 53 சதவீத இயற்கை எரிவாயுவை (Natural gas) இறக்குமதி செய்தது.
விவசாயிகளுக்கு உதவ எத்தனால் பயன்பாடு:
விவசாயிகள் மற்றும் நுகர்வோருக்கு உதவ எத்தனால் (Ethanol) பயன்பாட்டை அதிகரிக்க இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. எரிசக்தி துறையில் இந்தியா தலைமை இடத்தை வகிக்க, சோலார் எரிசக்தியில் கவனம் செலுத்தி வருகிறோம். மக்களின் வாழ்க்கை எளிதாக இருக்க வேண்டும் என்பதற்காக, பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என ஊக்கப்படுத்தி வருகிறோம். இயற்கை எரிவாயுவை, ஜிஎஸ்டி (GST) வரம்பிற்குள் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
சிறு, குறு தொழில் முனைவோருக்கு ஜாக்பாட்! முதலீட்டு மானியம் 3 மடங்காக அதிகரிப்பு!