பருவமழை, ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த காற்று ஆகியவை இந்தியாவின் மா சாகுபடியில் 20% வரை சேதத்தை ஏற்படுத்தியுள்ளன என ICAR சார்பில் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூத்த ICAR அதிகாரிகளின் கூற்றுப்படி, தாமதமாக பெய்த மழை, ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த காற்று ஆகியவை நாட்டின் மா சாகுபடியில் 20% வரை சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. வட இந்தியாவில் அடிக்கடி இழப்பு ஏற்படுகிறது. இந்த சேதத்தால் ஏற்றுமதிக்கு நல்ல மாம்பழங்கள் கிடைப்பது குறைந்துள்ளது, மேலும் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் பூச்சிகள் தாக்குவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
"பழங்களின் ராஜா" மற்றும் இந்தியாவில் குறிப்பிடத்தக்க பழ பயிரானது மாம்பழமாகும். உலகின் மாம்பழ உற்பத்தியில் கிட்டத்தட்ட 42% இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. வட இந்தியாவிலுள்ள மா விவசாயிகளும் ஆலங்கட்டி மழை மற்றும் இடியுடன் கூடிய கனமழையால் பெருமளவில் சாகுபடியில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மா பயிர் மட்டுமின்றி கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தோட்டக்கலை மற்றும் உணவு தானிய அறுவடைகளும் ஆலங்கட்டி மழையால் பாதித்துள்ளன.
"முதலில் பருவ மழை பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை, ஆனால் அடுத்தடுத்து பெய்த மழை மற்றும் ஆலங்கட்டி மழையால் மா விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி, ஒட்டுமொத்த இழப்பு சுமார் 20% ஆக இருக்கும் என்று மதிப்பிடுகிறோம்," என தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் (இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR)) ஜெனரல் ஏ.கே.சிங் கூறினார்.
வட இந்தியாவில், பழங்களில் அதிக உற்பத்தி செய்யும் மாநிலமான உத்தரபிரதேசத்தில் மாம்பழ விளைச்சல் பாதிப்பு அடிக்கடி நிகழ்ந்துள்ளன. வட இந்தியாவில் மட்டும் மாம்பழ விளைச்சலில் எதிர்பார்க்கப்படும் இழப்பு 30% க்கு மேல் இருக்கும், அதே நேரத்தில் தென்னிந்தியாவில், இழப்பு 8% க்கும் குறைவாக இருக்கும்.
லக்னோவில் ஐந்து ஹெக்டேர் தோட்டத்துடன் கூடிய மா விவசாயி உபேந்திர சிங் கூறுகையில், "மால்-மலிஹாபாத் மாம்பழ மையப் பகுதியில் ஆலங்கட்டி மழையால் சேதம் 75% ஐ எட்டியுள்ளது. ஆலங்கட்டி மழை இல்லாத பகுதிகளில் சேதம் குறைந்துள்ளது." என்றார். கறுப்பு பூஞ்சையின் வளர்ச்சியானது பூக்கும் காலத்தில் அதிக ஈரப்பதத்தால் ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
"பழங்கள் வந்துவிட்டன, ஆனால் கடுமையான இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று விளைச்சலுக்கு வழிவகுத்தது, மேலும் சேதம் தோராயமாக 25% இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது" என்று டஃபாரி ஃபார்மர் ப்ரொட்யூசர் நிறுவனத்தின் இயக்குனர் அதுல் குமார் அவஸ்தி கூறினார்.
அரசின் புள்ளிவிவரங்களின்படி, 2021-22 (ஜூலை-ஜூன்) காலாண்டில் நாடு முழுவதும் 210 லட்சம் டன்னாக மாம்பழ விளைச்சல் இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டு 203.86 லட்சம் டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
சிறு, குறு விவசாயிகளுக்கு டபுள் தமக்கா.. PM kisan நிதியுடன் ஏக்கருக்கு ரூ.5000 நிதியுதவி!