சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 10 April, 2025 5:40 PM IST

பொன்னேரி அடுத்த மெதுாரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அமைந்துள்ளது. இங்கு, விவசாயிகளுக்கு தேவையான உரம், யூரியா உள்ளிட்டவை மானிய விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

இயற்கை விவசாயத்திற்கு உதவும் வகையில், எண்ணெய் எடுக்காத வேப்பம் புண்ணாக்கு தயாரித்து விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கி வருகிறது. இதற்காக, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் உள்ள கிடங்கில், பிரத்யோக இயந்திரம் பொருத்தப்பட்டு உள்ளது.

சேலம் மாவட்டத்தில் இருந்து வேப்பம் கொட்டைகள் மொத்தமாக வாங்கி வந்து, அதை பதப்படுத்தி அதில் எண்ணெய்பு எடுக்காமல் புண்ணாக்கு தயாரிக்கப்படுகிறது. இதுவரை, 31,680 கிலோ வேப்பம் கொட்டைகள் வாங்கி, புண்ணாக்கு உற்பத்தி செய்து, ஒரு கிலோ 50 ரூபாய் என, விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

காஞ்சிபுரம், பெரியபாளையம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் வாங்கி செல்கின்றனர். இதுவரை, 25,360 கிலோ விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

மாவட்டத்திலேயே இங்கு மட்டுமே விவசாயத்திற்கு உதவும் வகையில், வேப்பம் புண்ணாக்கு தயாரித்து விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த புதிய முயற்சி விவசாயிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து, மெதுார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலர் சசிகுமார் கூறியதாவது:

வேப்பம் புண்ணாக்கு, 100 சதவீதம் இயற்கையானது. நெற்பயிர்கள் மற்றும் செடிகளை பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்கும். மகசூலை அதிகரிக்க செய்யும். ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை தவிர்க்கலாம்.

இதில் ஓரளவிற்கு லாபம் கிடைக்கிறது. அதேசமயம், விவசாயிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக உள்ளது. பொதுமக்கள் கிராமங்களில் கிடைக்கும் வேப்பம் கொட்டைகளை சேகரித்து கொடுத்தால், அவற்றை ஒரு கிலோ, 30 ரூபாய்க்கு கொள்முதல் செய்து கொள்ளவும் தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Read more:

இஸ்ரேல் மற்றும் இந்திய அமைச்சர் திடீர் சந்திப்பு? எங்கு நடந்தது? எதற்கு நடத்தது?

தஞ்சாவூர் மாவட்டத்தில் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

English Summary: Neem oil production to help agriculture, Medur Agricultural Cooperative Society's new initiative
Published on: 10 April 2025, 05:40 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now