News

Friday, 03 May 2019 04:40 PM

பொது மற்றும் பல் மருத்துவத்திற்கான நுழைவு தேர்வு வரும் மே  5  ஆம் தேதி நடைபெற உள்ளது. நாடு முழுவதிலிருந்து 15 லட்சதிற்கு  அதிகமானவர்கள் தேர்வு எழுதவுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 1.40  மாணவர்கள் 14   மையங்களில் எழுத உள்ளனர். மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக 11 இந்தியா மொழிகளில் கேள்வித்தாள்கள் அச்சிட பட்டுள்ளன.  

லிம்ரா ஓவெர்செஸ் எடுகேஷன் மாணவர்களுக்கு உதவும் வகையில் இரண்டு வாட்ஸாப் என்னை கொடுத்து இருக்கிறார்கள். மாணவர்கள் தங்களின் பெயர், முகவரி, ஹால் டிக்கெட் எண் , தேர்வு மையம், கைபேசி எண் இவற்றை 9952922333, 9445483333 என்ற எண்ணிற்கு தெரிவித்தால்  தேர்வு மையம்  இருக்குமிடம், அடைவதற்கான சமயம் மற்றும் கூகுள் மேப் இவை அனுப்பி வைக்க படும். வெளியூர் மாணவர்கள் எனில் அவர்களுக்கான பேருந்து, வழித்தடம் போன்ற விவரங்கள் அனுப்பி வைக்க படும். 

தேசிய தேர்வு மையம் மாணவர்களுக்கு சில விதிமுறைகளை கூறியுள்ளது.

  • தேர்வு பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெற உள்ளது.
  • மாணவர்கள்01:15 மணிக்குள் தேர்வு மையத்துனுள் இருக்க வேண்டும்.
  • 01:30 மணிக்கு மேல் மையத்தினுள் செல்ல அனுமதி இல்லை.
  • 01:30 முதல் 01:45 வரை மாணவர்களுக்கு தேர்வு விதி முறைகள் குறித்து விளக்க படும்.
  • மாணவர்கள் ஹால் டிக்கெட் மட்டும் எடுத்து செல்ல அனுமதிக்க படுவர்.
  • மாலை 5 மணிக்கு பின்னரே மாணவர்கள் வெளிய செல்ல அனுமதிக்க படுவர்.
  • விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட பாஸ்போர்ட் புகைப்படத்தை எடுத்து வர வேண்டும்.

தேர்வு மையங்கள் மாற்றம்

 சில தவிர்க்க முடியாத காரணத்தினால் ஒரு சில தேர்வு மையங்கள் மாற்ற பட்டுள்ளன. புதிய தேர்வு மையங்களை மாணவர்கள் இணையத்தளத்தின் மூலமாக தெரிந்து கொள்ளும் படி கேட்டு கொள்கிறார்கள். மேலும் மையங்களில் மற்றம் இருக்கும் பட்சத்தில் மாணவர்கள், மாற்றப்பட்ட விவரங்களை பதிவிறக்கம் செய்து வைத்து கொள்ளும் படி கேட்டு கொள்கிறார்கள்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)