News

Thursday, 28 January 2021 12:48 PM , by: Daisy Rose Mary

இந்தியாவில் மத்திய பாஜக அறிமுகப்படுத்தியுள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களால், விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கும் என்று என்று, சர்வதேச நிதியத்தின் தலைமை பொருளாதார வல்லுனர் கீதா கோபிநாத் கருத்து தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் போராட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லை பகுதிகளை முற்றுகையிட்டு கடந்த 65 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தோல்வியடையும் பேச்சுவார்த்தைகள்

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக மத்திய அரசு, விவசாயிகளுடன் நடத்திய 11 சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தன. இந்நிலையில், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, குடியரசு தினத்தன்று டெல்லியில் நடைபெற்ற டிராக்டர் பேரணியும் வன்முறையில் முடிந்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கும்

இந்நியிலையில், இந்த புதிய வேளாண் சட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ர்வதேச நிதியத்தின் தலைமை பொருளாதார வல்லுனர் கீதா கோபிநாத், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை, எங்கு அதிக விலை கிடைக்கிறதோ அங்கு விற்பனை செய்ய, மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் வழி செய்கின்றன என தெரிவித்துள்ளார்.

அடித்தட்டு விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது

மேலும் அவர் கூறியுள்ளதாவது, விவசாயிகளுக்கு பரவலான சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி தருகின்றன. மொத்த விலை சந்தை மட்டுமின்றி, வரி ஏதும் செலுத்தாமல், வெளிச் சந்தைகளில் விளை பொருட்களை விற்க உதவுகின்றன. ஒரு முறையில் இருந்து, வேறு முறைக்கு மாறுவதற்கான சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் போது, இயல்பாக ஏற்படும் சில பிரச்னைகளை தவிர்க்க முடியாது. அத்தகைய இடர்பாடுகளால், அடித்தட்டு விவசாயிகள் பாதிக்கக் கூடாது. அவர்களுக்கான சமூக பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், இது தொடர்பாக விவசாயிகளுடன் இந்திய அரசு பேச்சுவார்த்த நடத்தி வரும் நிலையில், என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றும் கீதா கோபிநாத் கூறியுள்ளார்.

மேலும் படிக்க...

பயிர்கள் சேதமடைந்து நஷ்டமடைந்த போதிலும், மாடுகளுக்கு தீவனம் அளிக்க அறுவடை செய்யும் விவசாயிகள்! 

Budget 2021 Mobile App : பட்ஜெட் தொடர்பான அனைத்து விவரங்களும் உங்கள் கைகளில்!

வேளாண் பல்கலைக்கழத்தில் 21 காலிப் பணியிடங்கள்! - உடனே விண்ணப்பிக்க... முழு விபரம் உள்ளே!

வேலையில்லாதவருக்கு அரசின் உதவித்தொகை! விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 31

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)