புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு அதிக நன்மை மட்டுமே கிடைக்கும். எந்த நிலையிலும் விவசாயிகளை அரசாங்கம் கைவிடாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்து வரும் எதிர்கட்சிகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.
தொழிதுறை வர்த்தக கூட்டம்
சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவகத்தில் தொழில் துறையினர் சார்பில் வர்த்தக கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன், தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன், இந்தியா சிமெண்ட்ஸ் நிா்வாக இயக்குநா் என்.சீனிவாசன், டிவிஎஸ் மோட்டாா்ஸ் நிறுவனத் தலைவா் வேணு ஸ்ரீநிவாசன், டி.வி.எஸ். குழும இணை இயக்குநா் தினேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் பேசிய நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட் அறிக்கையில் வேளாண் உள்கட்டமைப்புகளுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களை விரைவில் செயல்படுத்தினால், நாட்டின் வளா்ச்சிக்குப் பேருதவியாக இருக்கும். இந்தத் திட்டங்கள் வாயிலாக, சரக்குப் போக்குவரத்து துறை வளா்ச்சி அடையும் என்றார்.
விவசாயிகளை காப்பாற்றும் பாஜக
கொரோனா பொதுமுடக்கத்தின் போது, தொழில்துறையினா் நிலையைக் கருத்தில்கொண்டு, அவா்களுக்கு உதவும் வகையில் ஏராளமான தொகுப்புகள் அறிவிக்கப்பட்டன. குறிப்பாக, பழங்கள், காய்கறிகள் உள்பட பல்வேறு சிறு வியாபாரிகளுக்கும் ரூ.10,000 கடன் கொடுக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன்மூலம், கந்துவட்டி கொடுமைக்காரா்களிடம் சிறு வியாபாரிகள் சிக்காமல் பாதுகாக்கப்பட்டனா் என்றார்.
எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரம்- குற்றச்சாட்டு
வேளாண் சட்டங்கள் குறித்து பேசிய நிர்மலா சீதாராமன், மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண்மை சட்டங்களால், விவசாயிகளுக்கு பல்வேறு விதங்களில் நன்மை மட்டுமே உள்ளதாக தெரிவித்தார். ஆனால், விவசாயிகளின் நிலம் பறிபோய்விடும் என்று எதிா்க்கட்சியினா் பொய்ப் பிரசாரம் செய்து வருகின்றனா் என குற்றம்சாட்டினார்.
புதிய வேளாண் சட்டத்தால் நன்மை
பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலத்தில், ஒப்பந்தத்தை திரும்பப் பெற்றால் விவசாயி சிறைக்குச் செல்ல வேண்டும். ஒப்பந்தத்துக்கு கட்டுப்படாவிட்டால், அதிக அபராதம் செலுத்த வேண்டும். இப்படியான செயல்பளுக்கு புதிய வேளாண் சட்டத்தில் இடமில்லை. ஆனால், மத்திய அரசு கொண்டு வந்த வேளாண்மை சட்டம் விவசாயிகளைப் பாதுகாக்குகிறது. இந்த வேளாண்மை சட்டங்களால் விவசாயிகளுக்கு அதிக நன்மை உள்ளது. உற்பத்தி செய்யும் பொருளை எங்கு சென்று விற்றாலும் அதற்கான பலனை விவசாயிகள் பெற முடியும் என்றும் நிர்மலா சீதாரமன் தெரிவித்தார்.
மேலும் படிக்க...
மகசூல் விளைச்சலை அளவிட ட்ரோன்களை பயன்படுத்தலாம்! - வேளாண்துறைக்கு அனுமதி!
வாடகைக்கு நெல் அறுவடை இயந்திரம் வனியோகம் - விவசாயிகள் பயன்பெற அழைப்பு!!