சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அலங்கார ஊர்திகள் மேலும் ஒரு வாரம் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே அலங்கார ஊர்திகளை பார்வையிடாத மக்களுக்கு, இது ஒரு அறிய வாய்ப்பு.
இதுகுறித்து முதல்-அமைச்சர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், சென்னையில் 26.01.2022 அன்று நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் செய்தித் துறை சார்பில் விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில், தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் மூன்று அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டு, சிறப்பாக நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் கண்டுகளிக்கின்ற வகையில் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் 26.01.2022 அன்று அந்த ஊர்திகளை சென்னை, தீவுத்திடலில் கொடியசைத்து துவங்கி வைத்தார்.
தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்ட மக்களிடையே சென்று மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ள இந்த அலங்கார ஊர்திகள், சென்னை மாநகர மக்கள் கண்டு களித்திடும் வகையில் சென்னை மெரினா கடற்கரை இணைப்புச் சாலையில் விவேகானந்தர் இல்லம் எதிரே பொதுமக்களின் பார்வைக்கு 20.02.2022 முதல் காட்சிப்படுத்தப்பட்டு வந்தது. மேலும் இந்த ஊர்திகளை காண ஏறலாமான மக்கள் வந்து கூவிந்தனர்.
நாள்தோறும் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளும் பெரும்திரளாக வந்து, இந்த அலங்கார ஊர்திகளை பார்வையிட்டு வருவதைத் தொடர்ந்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் 21.2.2022 அன்று இந்த ஊர்திகளைப் பார்வையிட்டு அங்கு பெரும்திரளாக கூடியிருந்த மாணவச் செல்வங்களுடன் கலந்துரையாடி, செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
இதற்கிடையே, சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்கள், மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் முதல் அமைச்சருக்கு விடுத்த கோரிக்கையை ஏற்று, மேலும் ஒரு வார காலத்திற்கு அவ்விடத்தில் இந்த அலங்கார ஊர்திகள் காட்சிப்படுத்தப்படும் என தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது, மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க:
காற்று வெளியிடை படத்தின் பிரபல மலையாள நடிகை காலமானார்
தோட்டக்கலை மீது ஆர்வம் கொண்டவர்களுக்கான 5 தோட்டக்கலை குறிப்புகள்