News

Thursday, 31 March 2022 10:48 PM , by: R. Balakrishnan

New Conditions on Jewelry Discount

நகை கடன் தள்ளுபடி பெற விரும்பும் பயனாளிகளை பீதியில் உறைய வைக்கும் புதிய நிபந்தனைகளை அதிகாரிகள் விதித்துள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று, முக்கிய வாக்குறுதியாக வாக்காளர்களுக்கு குறிப்பிட்டு இருந்தது. அதாவது கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் மற்றும் அதற்கு குறைவாக தங்க நகைகளை அடமானம் வைத்து உள்ளவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்து இருந்தார். ஆனால் திமுக ஆட்சியை பிடித்த பிறகு கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலும் பெறப்பட்டு இருக்கும் நகைக்கடன் தள்ளுபடியை பெற புதிய நிபந்தனைகளை தமிழக அரசு அதிரடியாக விதித்துள்ளது.

நகைக்கடன் தள்ளுபடியில் புதிய சிக்கல் (New issue with jewelry loan discount)

நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதி உள்ளவர்கள் எண்ணி்க்கையை எந்த அளவுக்கு குறைக்க முடியுமோ? அந்த அளவுக்கு குறைக்கப்பட்டு உள்ளது தான் தற்போது எழுந்துள்ள சிக்கல். அதாவது நகையை 5 சவரனுக்கு குறைவாக இரண்டு, மூன்று பகுதிகளாக பிரித்து வைத்து உள்ளவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், ஓய்வூதியதாரர்கள், 40 கிராமுக்கு (5 சவரன்) மேல் ஒரு கிராம் அதிகமாக நகை அடமானம் வைத்திருப்பவர்கள் உள்ளிட்டோருக்கு நகை கடன்கள் தள்ளுபடி கிடையாது என்று திமுக அரசு தற்போது கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது.

ஏமாந்த பயனாளிகள் (Deceptive beneficiaries)

தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின்படி 5 சவரன் நகைக்கடன் பெற்று உள்ள அனைவருக்கும் தள்ளுபடியை அரசு அறிவிக்க வேண்டும் என்ற பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தற்போது நகை கடன்கள் தள்ளுபடிக்கு தகுதியானவர்களின் பட்டியலில் தங்களது பெயர் இடம் பெறாததை கண்டு பலர் மிகுந்த ஏமாற்றமும், அரசின் மீது அதிருப்தியும் அடைந்து உள்ளனர். அதே சமயம் முதல்வர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை விதிகளின் படி நிறைவேற்றுவதற்கான நிர்வாக ரீதியான பணி இறுதிக்கட்டத்தை எட்டியதை அடுத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.

நகை கடன் தள்ளுபடியில் பாரபட்சம் 

அந்தவகையில் தென்காசி மாவட்டம் சிவகிரி அடுத்துள்ள தென்மலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தென்மலை மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் நகை அடகு வைத்து கடன் பெற்று இருந்தனர். தற்போது தமிழக அரசு 5 சவரனுக்கு கீழ் உள்ள நகைக்கடன்களை தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து பல கூட்டுறவு கடன் சங்கங்களில் அடகு வைத்த நகைகளை திரும்பவும் வழங்கி வருகின்றன. அதே சமயம் இந்த வங்கியில் சிலருக்கு நகைகளை திரும்ப வழங்கப்பட்டதாகவும், இன்னும் பலருக்கு நகைகளை திரும்ப வழங்காமல் இழுத்தடித்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

ஓராண்டு வட்டி (One year Interest)

ஒரு சிலருக்கு நகைக்கடன் தள்ளுபடி ஆகவில்லை என்றும், இதில் ஒரு சிலருக்கு கணக்கெடுப்பில் விடுபட்டு விட்டதாகவும், ஒரு சிலரை ஓராண்டு வட்டியை கட்டி மீட்டு நகைகளை மீட்டு செல்லுமாறு கூறியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும் வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளுக்கு பணம் வழங்கப்படாமல் அதை பாஸ்புக்கில் கைகளில் வரவு வைத்து இருப்பதாகவும் வெளியே இருக்கின்ற ஏடிஎம் இயந்திரத்தில் பார்த்தபோது பணம் இல்லாமல் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதை பார்த்து பெரும்பாலான பயனாளிகள் அதிர்ச்சி அடைந்து கூட்டுறவு சங்க அதிகாரிகாளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் அவர்கள் முறையான பதில் எதுவும் கூறாமல் அலட்சியமாக இருந்துள்ளனர்.

போராட்டம் (Protest)

இதனால் ஆத்திரம் அடைந்த பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் குறிப்பிட்ட கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம், இதுகுறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். நகை கடன் தள்ளுபடி பெற வேண்டுமானால் ஓராண்டு வட்டி செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள் புதிய நிபந்தனையை விதித்து இருப்பது பொதுமக்கள் மற்றும் பயனாளிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

இல்லம் தேடி வரும் ரேஷன்: பஞ்சாப் முதல்வரின் அதிரடி திட்டம்!

பான் கார்டு, ஆதார் இணைக்கப்பட்டு உள்ளதா: எப்படி தெரிந்துகொள்வது?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)