News

Thursday, 13 December 2018 05:11 PM

வங்கக் கடலில் வலுப்பெறும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் நாளை மாலை 5.30 மணி முதல் 16-ம் தேதி இரவு 11.30 மணி வரையிலான காலகட்டத்தில் தமிழக கடற்கரையில் மணிக்கு 75 கிமீ வேகம் வரை காற்று வீசக்கூடும் என்று INCOIS என்ற இந்திய தேசிய கடற்கரைசார் தகவல் சேவை மையம்   எச்சரிக்கை விடுத்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி முதல் பழவேற்காடு வரையிலான கடலோரப் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும்.
அதன் காரணமாக கடலோரப் பகுதியில் 2.5 மீட்டர் முதல் 4.5 மீட்டர் உயரம் வரை அலை எழும்பக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது. இதையடுத்து இன்று முதலே மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையமும் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் அந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறி அடுத்த 72 மணி நேரத்தில் வடதமிழகம், ஆந்திரா நோக்கி நகரக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)