அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு அனேக இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கரையைக் கடந்தது (Crossed the border)
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று மாலை புதுச்சேரி அருகேக் கரையைக் கடந்தது. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்பட சில இடங்களில் பரவலாக நல்ல மழை பெய்தது.
அதன் தொடர்ச்சியாக அந்தமானில் நாளை (சனிக்கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை
அதன்படி, இன்று நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
13.11.21
நாளை (சனிக்கிழமை) நீலகிரி, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
14.11.21
வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை யும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
15.11.21
15-ந்தேதி (திங்கட்கிழமை) உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை (Warning for fishermen)
12.11.21
மன்னார் வளைகுடாப் பகுதிகளில் பலத்தக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் படிக்க...
காற்றழுத்த தாழ்வு மண்டலம்-இன்று மாலை கரையைக் கடக்கிறது!
அதிதீவிரக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி 11-ந்தேதி சென்னையை நெருங்கும்: மிக மிக பலத்த மழை எச்சரிக்கை!