அரபிக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning to fishermen)
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைப் பகுதிகளில் நிலவிய வளிமண்டல சுழற்சியானது, நேற்று இரவு முதல் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக அதே இடத்தில் நீடிக்கிறது.
சூறாவளிக் காற்று (Hurricane force winds)
இதன் காரணமாக, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக் காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
30.03.21 மற்றும் 31.03.21
தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியத் தெற்கு அந்தமான் கடல்பகுதியில் தற்போது நிலவும் வளிமண்டல சுழற்சி(up to 4.5 kilometer) அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பதியாகவும், அதனைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தப் பகுதியாகவும் உருமாற வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக,
30.03.21 முதல் 031.03.21 வரை
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியத் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
01.04.21
அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
எனவே இப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வானிலை முன்னறிவிப்பு (Weather Forecast)
30.03.21 முதல் 03.04.21 வரை
தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில், பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னை (Chennai)
சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வாகனம் பொதுவாகத் தெளிவாகக் காணப்படும்.
வெப்பநிலை (Temperature)
அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.
அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு
02.04.21 மற்றும் 03.04.21
தரைக்காற்று வடமேற்கு திசையில் இருந்து, தமிழகப் பகுதி நோக்கி வீசச் சாத்தியக்கூறுகள் உள்ளன. இதனால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால், பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
மழை (Rain)
கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் 3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த முக்கிய பயிருடன் கலப்பு பயிரிடுங்கள்! - வேளாண்துறை அறிவுரை!!
தமிழக காய்கறிகளை திருப்பி அனுப்பும் கேரளா! - அதிக ரசாயன மருந்து பயன்படுத்தப்படுவதாக புகார்!!
வேளாண் மற்றும் அறிவியல் பட்டதாரிகளுக்கு இலவச பயிற்சி- அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வழங்குகிறது!