வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாய நிலங்களில் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் (Coconut Trees) வளர்க்கப்பட்டு வருகிறது, குறிப்பாக அம்மணாங்குப்பம், பசுமாத்தூர், ஐதர்புரம், பெரும்பாடி உள்ளிட்ட கிராமங்களில் பல நூறு ஏக்கரில் தென்னை மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
புதுவித நோய்
இந்நிலையில் தென்னை மரங்களை புதுவிதமான மர்ம நோய் தாக்கி வருகிறது. இந்நோய் தாக்கப்பட்ட தென்னை மரங்களில் உள்ள ஓலைகளில் சிறு சிறு வெள்ளை புழுக்களாக உருவாகி பின்பு தென்னை ஓலை முழுவதும் கருப்பாக மாறுகிறது, இதனால் தென்னை ஓலைகள் காய்ந்து, தென்னை மரமும் காய்ந்து போகும் நிலை உள்ளது. இதன்காரணமாக தேங்காய் விளைச்சலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Also Read: இயற்கை விவசாயிகள் தரச்சான்று பெற விண்ணப்பிக்கலாம்!
விவசாயிகள் கோரிக்கை
மேலும், தண்ணீர், உரங்களின் விலை உயர்வு, கூலியாட்கள் கிடைக்காததால் விவசாய பயிர்களை பயிரிடாமல் தென்னங்கன்றுகளை நட்டோம். பல ஆண்டுகளாக பாதுகாத்து வளர்த்த தென்னை மரங்கள் காய்ந்து, காய்கள் உதிர்வதை பார்க்கும்போது மிகவும் வேதனையாக உள்ளது. எனவே விவசாயத்தை காக்கவும் தென்னை மரங்களைக் காக்கவும் வேளாண் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னையில் ஏற்பட்டுள்ள புதுவிதமான கருப்பு நோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க
தென்னையைத் தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள்: கட்டுப்படுத்த ஆலோசனை!
திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல்: வேளாண் அதிகாரி விளக்கம்!