மின் கட்டண உயர்வுக்கு, ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் விரைவில் கிடைக்க உள்ளது. எனவே, புதிய மின் கட்டணத்தை, அடுத்த மாதம் முதல் அமல்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது என, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
மின் கட்டணம் (Electricity Bill)
தலைமைச் செயலகத்தில், அவர் அளித்த பேட்டி:தமிழகம் முழுதும், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ள மின்வாரிய அலுவலக இடங்களில், முதற்கட்டமாக 100 இடங்களில், மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும், 'சார்ஜிங் பாயிண்ட்' அமைக்கப்பட உள்ளது. அவற்றின் பயன்பாடு மற்றும் வரவேற்பை பொறுத்து விரிவுப்படுத்தப்படும்.
வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள 1.45 லட்சம் மின் கம்பங்கள் தயாராக உள்ளன. மழைக்காலத்தை எதிர்கொள்ள மின்வாரியம் தயாராக உள்ளது. விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில், ஏற்கனவே ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. இரண்டாம் கட்டமாக 50 ஆயிரம் இலவச விவசாய மின் இணைப்புகள், 100 நாட்களில் வழங்கும் திட்டம், இந்த மாத இறுதிக்குள் துவக்கப்படும்.
மின் கட்டண உயர்வுக்கு, ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் விரைவில் கிடைக்க உள்ளது. எனவே, புதிய மின் கட்டணத்தை, அடுத்த மாதம் முதல் அமல்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க