இந்திய ரயில்வே தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சலுகைகளையும் வசதிகளையும் வழங்குகிறது.இதனால் ரயில்களில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனாலும், டிக்கெட் முன்பதிவு செய்வதில் சில பயணிகள் சிரமத்தை சந்திக்க வேண்டியுள்ளது. இதைச் சரிசெய்ய, ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய அம்சத்தை சேர்க்க உள்ளது.
குரல் பதிவு (Voice Record)
முன்னதாக, டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, இணையதளத்தில் பயணிகளின் தகவல்களை நிரப்ப வேண்டும். அதற்கு நீங்கள் டைப்பிங்செய்ய வேண்டி இருக்கும். அதற்கு அதிக நேரமும் செலவு ஆகும். இது நிறையப் பேருக்கு தொந்தரவாகவும் இருந்தது. இந்நிலையில், புதிய அம்சத்தின் உதவியுடன் உங்களுடைய குரல் பதிவு மூலமாகவே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இந்த புதிய அம்சத்தின் மூலம், தகவல்களை நிரப்புவதில் உள்ள சிரமம் இனி இருக்காது.
டிக்கெட் முன்பதிவு (Ticket Reservation)
IRCTC இன் இந்த மேம்பட்ட அம்சத்தின் உதவியுடன் பயணிகள் பேசுவதன் மூலம் தங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். இதன் மூலம் டிக்கெட் எளிதாக பதிவு செய்யப்படும். இந்த உலகம் AI ChatBotகளை நோக்கி வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம். இத்தகைய சூழ்நிலையில், இந்திய ரயில்வே தனது செயலியை இன்னும் மேம்பட்டதாக மாற்றுகிறது.
வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கும் ஆஸ்க் திஷாவில் (Ask Disha 2.0) பல முக்கிய மாற்றங்களைச் செய்யத் தயாராகி வருகிறது. புதிய அம்சத்துடன் மக்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய குறைந்த நேரத்தையே இனி எடுத்துக் கொள்வார்கள். தற்போது, அதன் சோதனை பதிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த சோதனை வெற்றியடைந்த பிறகு, இது அனைத்து பயணிகளுக்கும் பயன்பாட்டுக்கு வரும்.
ஐஆர்சிடிசியின் ஆஸ்க் திஷா 2.0-இல், குரல் கட்டளையின் விருப்பம் அனைத்து பயணிகளுக்கும் விரைவில் கிடைக்கும். இது தவிர, டிக்கெட்டின் பிரிவியூ, பிரிண்ட் மற்றும் ஷேர் விருப்பமும் கிடைக்கும். இதில், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளையும் தேர்ந்தெடுக்கலாம். அனைத்து வகுப்பு பயணிகளும் தற்போதைய குரல் கட்டளை மூலம் வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
சிறு வியாபாரிகளுக்கு பென்சன் திட்டம்: பயன்பெறுவது எப்படி?
வட்டி உயர்வுக்கு இனி வாய்ப்பில்லை: ரிசர்வ் வங்கி கூட்டத்தில் முக்கிய முடிவு!