1, SMS மூலம் நியாய விலைக் கடைகளின் விவரங்களை அளிக்கும் புதிய வசதி
நியாய விலைக் கடைகளில் எஸ்.எம்.எஸ் மூலம் விவரங்களை பெறும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருப்பதாக சிவில் சப்ளை துணை ஆணையர் சண்முகவேல் தெரிவித்துள்ளார்.
நியாய விலைக் கடைகளில் பதிவு செய்து வைத்துள்ள மொபைல் எண்ணில் இருந்து PDS 102 எனக் குறிப்பிட்டு 9773904050 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டும். இதன்மூலம் நியாய விலைகள் அன்றைய தினம் திறந்துள்ளதா? இல்லை மூடியிருக்கிறதா? எனத் தெரிந்து கொள்ளலாம். மேலும் PDS 101 எனக் குறிப்பிட்டு 9773904050 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினால் நியாய விலைக் கடையில் என்னென்னெ பொருட்கள் இருப்பு உள்ளது எனப் பதில் மெசேஜ் வரும்.
இந்த புதிய வசதியின் மூலம் நியாய விலைக் கடைகளுக்கு கையில் பையுடன் சென்று ஏமாற்றம் அடைந்து வருவதை தடுக்க பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2,12 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தின் நீலகிரி, கோயம்புத்தூர் உட்பட 12 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக இயல்பினை விட அதிகமாக வெப்பத்தின் தாக்கம் இருந்த நிலையில் அடுத்த 5 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை தொடர்பான அறிவிப்பினை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
3, G-20 மாபெரும் கடற்கரை தூய்மைப்பணி- தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு
சுற்றுச்சூழலுக்கான G-20 கூட்டங்களின் ஒரு அங்கமாக மாபெரும் கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி இந்தியாவின் பல்வேறு கடற்கரையில் நடைப்பெற்று வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் சென்னையிலுள்ள பெசண்ட் நகர் கடற்கரை, செங்கல்பட்டு கோவளம் கடற்கரை, கன்னியாகுமரி மணக்குடி கடற்கரையில் தூய்மை பணி நடைப்பெறுகிறது. சென்னையில் நடைப்பெற்ற தூய்மை பணியில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், மெய்யநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.
4, கடலின் குப்பைகளில் செய்யப்பட்ட ராட்சச மீன் வடிவம்
இன்று சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் G-20 மாபெரும் கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. நிகழ்வின் ஒருபகுதியாக கடற்கரையில் இருந்து மீட்கப்பட்ட பிளாஸ்டிக் கொண்டு ராட்சச மீனின் உருவம் உருவாக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுப்ரியா சாஹீ ஐஏஎஸ் கடலின் தூய்மையினை பாதுகாக்க அனைவரும் உறுதிக்கொள்வோம் என குறிப்பிட்டுள்ளார்.
5, இஞ்சி விலை கிடு கிடு உயர்வு!!
கடந்த சில நாட்களாக இஞ்சி வரத்து குறைவாக உள்ளதால் அதன் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ இஞ்சி ரூ.150 வரையில் விற்கப்பட்டு வந்தநிலையில் தற்போது கிலோ ரூ.200-ஆக விற்பனை ஆனது. அதேவேளையில் மார்க்கெட்டில் கிலோ இஞ்சி ரூ.250 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து விவசாயி ஒருவரிடம் கேட்டபோது, வெயில் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டதால் வரத்து குறைந்து இஞ்சியின் விலை உயர்ந்துள்ளது என்றார்.
மேலும் படிக்க
ஆவின் தண்ணீர் பாட்டில்- கைக்கொடுக்குமா தமிழக அரசுக்கு?
குறுவை சாகுபடி- ஆடுதுறை நெல் ரகத்தை (ADT) விரும்பும் விவசாயிகள்