மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 19 May, 2022 5:00 PM IST
Tamil Nadu Government on pay hike for government doctors....

சென்னை: அரசு மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பாக புதிய உத்தரவு பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ரூ.2.5 கோடி மதிப்பில் 14 டயாலிசிஸ் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், “100 ஆண்டுகள் பழமையான சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை 200 படுக்கைகள் கொண்ட சிறப்பு மருத்துவமனையாக 40 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் மற்றும் ரூ.12 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் நல சிகிச்சை பிரிவு என்ற சீமாங் கட்டிடமும் அமைக்கப்படும்.

கிண்டியில் கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் கொரோனா மருத்துவமனை, 60 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் மூத்தோருக்கான மருத்துவமனையாக மாற்றப்படும். இது தொடர்பாக மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதை ஒரு மாதத்தில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கிண்டியில் ரூ.230 கோடியில் அறிவிக்கப்பட்ட பல்நோக்கு அரசு மருத்துவமனை கட்டுமானப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

கடலூரில் போலி மருத்துவர் சத்யசீலன் என்பவர் சிகிச்சை கொடுத்து 5 வயது குழந்தை இறந்தது தொடர்பாக, மினி கிளினிக் இருந்தால் இச்சம்பவம் நடந்திருக்காது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு விமர்சித்துள்ளார். குழந்தைகளுக்கான மருத்துவச் சேவை அம்மா கிளினிக்கில் இருந்ததா? ஒரு வருட வேலை என்று எழுதி வைத்த பிறகுதான் டாக்டர்கள் பணியமர்த்தப்பட்டனர்.

தஞ்சாவூர், எழும்பூரில் மருத்துவப் படிப்பை முடித்த சத்தியசீலன் என்ற போலி மருத்துவர், மற்றொரு மருத்துவர் சத்தியசீலனின் சான்றிதழுடன், புகைப்படத்தை மட்டும் மாற்றி, போலிச் சான்றிதழ் மூலம் ஐந்து ஆண்டுகளாக மருத்துவமனை நடத்தி வருகிறார். திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகிறது. தகவல் தெரிந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் 4 ஆண்டுகளாக போலி சான்றிதழ் மூலம் மருத்துவமனையை சிறப்பாக நடத்தி வந்து இருக்கிறார்.

அரசு மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பாக அரசு ஆணை 354 மற்றும் ஆணை 293 ஆகிய 2 அரசாணைகள் உள்ளன.

இந்த இரண்டு அரசாணைகளையும் சேர்த்து யாரையும் காயப்படுத்தாத புதிய அரசாணைஅமைக்கும் பணி நடந்து கொண்டு வருகிறது” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் தாரிக் அல் ஹாஷிமி தெரிவித்தார்.

மேலும் படிக்க:

தேசிய மருத்துவர்கள் தினம்! குவியும் வாழ்த்துக்கள்!

நீட் முதுகலை தேர்வை ஒத்திவைப்பு- இந்திய மருத்துவர்கள் சங்கம்

English Summary: New government on pay hike for government doctors: Minister M Subramaniam!
Published on: 19 May 2022, 05:00 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now