தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது குறைந்து வரும் நிலையில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையே பள்ளிகள் திறக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கி கிடைக்கும் காரணத்தால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பள்ளிகள் திறப்பு தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிகள் திறப்பதற்கு மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்ற பின்னரே முடிவு எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். அதனை தொடர்ந்து பள்ளிக் கல்வி ஆணையர் க.நந்தகுமார் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், அரசு, அரசு உதவி பெரும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், நலத்திட்டங்கள் உள்ளிட்ட பள்ளிக் கல்வி சார்ந்த செய்திகள் அனைத்தும் 'கல்வியியல் மேலாண்மை தகவல் முகமை (EMIS) என்ற இணையதளம் வழியாக நிர்வகிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அனுப்பப்பட்டுள்ளது. EMIS இணையதளமானது கல்வி சம்மந்தப்பட்ட பல்வேறு வகையான செயல்பாடுகளுக்கு அடித்தளமாக உள்ளது.
இந்த செயல்பாடுகளில் அதாவது TN-DIKSHA எனப்படும் டிஜிட்டல் முறையிலான பாடப்புத்தகங்களை பெறுதல், மாணவர்கள் எந்த நேரத்திலும் கற்றுக் கொள்ளும் வகையில் ஆயிரக்கணக்கான டிஜிட்டல் தரவுகள், ஆசிரியர்களுக்கான கற்றல் மற்றும் கற்பித்தல் தகவல்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பை செலுத்தும் வகையிலான வசதியும் உள்ளது.
இது பள்ளிக் கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஆகும். தரவுகளை பகிர்ந்து கொள்ள, கற்க, புரிந்து கொள்ள ஆசிரியர்களுக்கான பேஸ்புக் ஒர்க்பிளேஸ் ஆகிய வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. சுற்றறிக்கையில், அனைத்து மாவட்டங்களிலும் EMIS தள விவரங்கள் உடனுக்குடன் புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் இனிவரும் காலங்களில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம் நேரடி விவரங்கள் கோரப்படுவதை கைவிட வேண்டும் என்றும் குறிப்பிப்பட்டுள்ளது.
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம் நேரடி விவரங்கள் கோரப்படுவதற்கு பதிலாக EMIS இணையதளத்தை பயன்படுத்தி துறை சார்ந்த பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ளலாம் என்றும் இதற்கான வழிமுறைகளை முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்றும் இருந்தது. 2021-22ஆம் நடப்பு கல்வியாண்டில் 1 முதல் 7 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 2ஆம் பருவத்திற்கான பாடப்புத்தகங்களை அச்சிட ஏதுவாக உரிய தரவுகளை சேகரித்து அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக முதுகலைக் கல்லூரிகள் மீண்டும் திறப்பு!
பள்ளிகள் திறக்கப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு
TNPSC தேர்வுக்கு ஆன்லைனில் தமிழக அரசு இலவச பயிற்சி!