தமிழகத்தில் இனி இவர்களுக்கும் முதியோர் உதவித் தொகை கட்டாயம் கிடைக்கும் என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
முதியோர் உதவித்தொகை
தமிழகத்தில் மூத்த குடிமக்கள், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை அரசின் சார்பாக வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஆட்சியில்,மூத்த குடிமக்கள் இந்த தொகையை பெற அவர்களுக்கு ஆண் வாரிசு இருக்கக் கூடாது என புதிய நிபந்தனை போடப்பட்டது.
தற்போது இதுகுறித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், கடந்த ஆட்சியில் கொண்டு வந்த இது போன்ற தேவையற்ற கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதாகவும், இதனால் 7.5 லட்சம் மூத்த குடிமக்கள் பயனடைய உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதன் மூலம், இதற்கு முன் உதவித்தொகை நிறுத்தப்பட்டவர் உள்ளிட்ட தகுதி வாய்ந்த அனைவருக்கும் உதவித்தொகை கட்டாயம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதற்கான பணிகள் அந்தந்த மாவட்ட வருவாய் அலுவலகங்களில் தொடங்கப்பட்டதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க
தமிழ்நாட்டில் பழைய பென்சன் திட்டம் வருமா? சென்னையில் நடக்கப் போகும் மாநாடு!
விரைவில் விசைத்தறிக்கு 1,000 யூனிட் இலவச மின்சாரம்: அமைச்சர் அறிவிப்பு!