News

Saturday, 09 April 2022 02:33 PM , by: R. Balakrishnan

New ration cards are now available by post

புதிய ரேஷன் கார்டுகள், நேரடியாக வீடுகளுக்கு தபாலில் அனுப்பப்படும் என, உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார். சட்டசபையில், அவரது அறிவிப்புகள்: சிறப்பாக செயல்படும் ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு, மாநில அளவில் முதல் பரிசாக, 15 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக, 10 ஆயிரம், மூன்றாம் பரிசாக, 5,000 ரூபாயும் வழங்கப்படும். எடையாளர்களுக்கு 10 ஆயிரம், 6,000 மற்றும் 4,000 ரூபாய் வழங்கப்படும். மாவட்ட அளவில் விற்பனையாளர்களுக்கு முதல் பரிசாக 4,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 3,000 ரூபாயும், எடையாளர்களுக்கு 3,000 மற்றும் 2,000 ரூபாய் வழங்கப்படும்l புதிய ரேஷன் கார்டுகள், பயனாளிகளின் இருப்பிடத்திற்கு தபாலில் அனுப்பப்படும்.

ரேஷன் கார்டு (Ration Card)

ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்க்க, நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில், ஒரு குடும்பத்திற்கு இரண்டு கிலோ வீதம் ரேஷன் கடைகளில் கேழ்வரகு வழங்கப்படும். சிவகங்கை, அரியலுார், வேலுார், திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில், ௧2 கிடங்குகள் கட்டப்படும்l நுகர்பொருள் வாணிப கழக கணக்குகளை முறைப்படுத்தி கண்காணிப்பதற்கு, புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டு, கணிணிமயாக்கும் திட்டம், 50 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும்.

திருவள்ளூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில், 'கான்கிரீட்' தரை மற்றும் மேற்கூரை அமைப்புடன் கூடிய 35 நெல் சேமிப்பு தளங்கள்; தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் உள்ள, 44 நெல் சேமிப்பு தளங்களுக்கு மேற்கூரை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

ரேஷன் பொருட்கள் கடத்தலை கட்டுப்படுத்தவும், பதுக்கலை தடுக்கவும், ஆந்திரா, கேரளா மாநில எல்லைகளில் உள்ள திருவள்ளூர், பொள்ளாச்சி, உத்தமபாளையம் ஆகிய இடங்களில் மூன்று ரோந்து காவல் படைகள் உருவாக்கப்படும்.

ரேஷன் பொருட்களை ஏற்றி செல்லும் வாகன நகர்வை கண்காணிப்பதற்காக, 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 50 கண்காணிப்பு கேமராக்கள் வாங்கப்படும்

மேலும் படிக்க

பெட்ரோலியத்திற்கு மாற்றாக மர உருண்டைகள் தயார்!

விவசாயப் பயிர்களுக்கு ட்ரோன் வழியாக மருந்து தெளிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)